Breaking News
Home / பிற செய்திகள் / பல்லவபுரம் நகராட்சி.. விஜிலென்ஸில் சிக்கிய- நகரமைப்பு அதிகாரி மாறன்.. சிக்கிய பொறியாளர் ரவிச்சந்திரன்..

பல்லவபுரம் நகராட்சி.. விஜிலென்ஸில் சிக்கிய- நகரமைப்பு அதிகாரி மாறன்.. சிக்கிய பொறியாளர் ரவிச்சந்திரன்..

பல்லவபுரம் நகராட்சியில் நகரமைப்பு அதிகாரியாக பணியாற்றும் எஸ்.வி.மாறன், ரூ1,51.500 இலட்சம்,  இலஞ்சம் வாங்கும் போது விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் சிக்கினார். ஆவடி நகராட்சியில் சட்டத்துக்கு புறம்பாக பல அப்ரூவல்கள் கொடுத்த காரணத்தால், நாமக்கல் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். நாமக்கல் நகராட்சியிலிருந்து அயல்பணியில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து ரூ30 இலட்சம் இலஞ்சம் கொடுத்து, பல்லவபுரம் நகராட்சிக்கு 12.09.2019ல் மாறுதல் பெற்று பணியில் சேர்ந்தார்.

பல்லவபுரம் நகராட்சியில் நகரமைப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்தவுடன், அடுக்குமாடி குடியிருப்புக்கு ஒரு கிச்சனுக்கு இலஞ்சம் ரூ30,000 என்பதை ரூ45,000 ஆக உயர்த்தி, இலஞ்ச பட்டியலை வெளியிட்டார்.

 23.10.2020 அன்று  மதியம் 2.20 விமானத்தில், ஆணையருடன்,  கோவை சென்றுவிட்டு இரவு 7மணிக்கு திரும்பி, நகராட்சி வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டார் மாறன். அதே போல் 2.11.2020 அன்று மதியம் 2.20 விமானத்தில் கோவை சென்றுவிட்டு, இரவு 7மணிக்கு திரும்பினார்.

  மாதா, மாதம் இரண்டு தடவை கோவைக்கு விமானத்தில் சென்று, இலஞ்ச பணத்தில் உரிய பங்கை, கொடுத்துவிட்டு அதிகாரமையத்தில் வலம் வருகிறார்.

  வாரா, வாரம் சனிக்கிழமை செம்பரம்பாக்கம் ஏரி மீன் ஆணையர்,  நகரமைப்பு அதிகாரி மாறன் வீட்டுக்கு செல்கிறது என்றால், கூட்டணி கொள்ளையை பார்த்துக்கொள்ளுங்கள்…

 மேலும் மாறன், தன் மனைவி பெயரில்  கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். மாறனின்  இன்றையை சொத்து ரூ100கோடியை தாண்டும்.. மேலும் தான் குடியிருக்கும் வீட்டுக்கு மாதம் ரூ3 இலட்சம் தவணைத் தொகை கட்டும் வகையில்  ரூ2கோடி கடன் வங்கியில் வாங்கியிருக்கிறார்.

  நகரமைப்பு அதிகாரி ரூ2கோடி வங்கியில் கடன் வாங்கினார் என்றால், வருமானத்தை கணக்கீட்டு கொள்ளுங்கள்..

 இப்படிப்பட்ட பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி எஸ்.வி.மாறன் தான், அப்ரூவலுக்கு ரூ1,51.500/- இலஞ்சம் வாங்கும் போது விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

  ஆணையருடன், பிரைவேட் காரில் வெளியில் சென்ற மாறன், நகராட்சிக்கு திரும்பி பிரைவேட் காரில் தனியாக வந்து இறங்கி, முதல் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றார்.  அப்ரூவலுக்கு இலஞ்சம் கொடுக்க வளாகத்தில் காத்திருந்தவர்களிடம் முதல் தளத்துக்கு வரும்படி அழைத்தார்.  முதல் தளத்தில் தன் சீட்டில் ரூ1,51,500 இலஞ்சம் எஸ்.வி.மாறன் வாங்கினார். அடுத்த சில நிமிடங்களில் விஜிலென்ஸ் வளையத்துக்குள் மாறன் கொண்டு வரப்பட்டார். ரூ1,51,500 விஜிலென்ஸ் பணம் என்பதால் மாறன் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் மாறன் கைது செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டுவிட்டதாக தெரிகிறது..

 மேலும் விஜிலென்ஸ் ரெய்டில் பொறியாளர் ரவிச்சந்திரனிடமிருந்து ரூ49000 பணமும் தங்க காசும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஆணையர் செல்போனை ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்..

  பல்லவபுரம்  நகராட்சியில் நகரமைப்பு அதிகாரி மாறன், பொறியாளர் ரவிச்சந்திரனும் விஜிலென்ஸில் சிக்கியது, பல நகராட்சி அதிகாரிகளிடம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

 பல்லவபுரம் நகராட்சியில் இலஞ்சமாக தங்க காசு வாங்குவது, விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பாக்ஸ்…

 நகரமைப்பு அதிகாரி மாறனை கைது செய்யாமல் இருக்க, விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு சிபாரிசு அதிகம் வந்த காரணத்தால், கைது செய்யாமல் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Comments

comments

About mani bharathi

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *