
செய்தித்துறையின் ஊழல்களை 4.11.2020ல் சிலைடு மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததும், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அலட்சியமாகவே இருந்தார்கள். இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமல்ல, செய்தித்துறையில் பணியாற்றும் உதவி பி.ஆர்.ஒ முதல் உதவி, துணை, இணை இயக்குநர்கள் மற்றும் கூடுதல் இயக்குநர் வரை ஊழலில் பங்கு வகிப்பதால், ஊழல் துறையா என செய்தியால் ஒரு சிலர் மட்டும் கொஞ்சுண்டு வருத்தப்பட்டார்கள்..
ஆண்டுக்கு ரூ100கோடிக்கு அதிகமாக தமிழ், ஆங்கில நாளிதழ்கள், பருவ இதழ்கள், டிவி மீடியாக்களுக்கு விளம்பரம் கொடுக்கப்படுகிறது. விளம்பரங்கள் கொடுக்க, செய்தித்துறை இயக்குநரகம் அப்ரூவல் ஏஜென்சியை நியமித்துள்ளது. இந்த அப்ரூவல் ஏஜென்சிகள் செய்தித்துறை அதிகாரிகளுக்கு கமிசன் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது.
விளம்பரங்கள் பெறும் நாளிதழ்கள் 25-30 சதவிகிதம் கமிசன் ஏஜென்சியிடம் கொடுத்துவிடும். அதில் ஏஜென்சிகள் 7 % -10 சதவிகிதம் எடுத்துக்கொள்வார்கள். செய்தித்துறை அதிகாரிகளுக்கு15% – 20 சதவிகிதம் என ஏஜென்சிகள் வாங்கி கொடுத்து விடும். சிறிய பத்திரிகைகளாக இருந்தால் 50:50, 60:40 என கமிசன் சதவிகிதம் மாறும்.
செய்தித்துறை அதிகாரிகளுக்கு கமிசன் வாங்கி தருவதில் தயக்கம் காட்டும் ஏஜென்சிகள் மாற்றப்பட்டுவிடும்..
2017ம் ஆண்டு கமிசன் வாங்கி தரும் ஏஜென்சிகள்..
1.Excellent ”2” Publicities
2. Elegant Publicities
3.Alaknanda Advertising
4.Graphics Ads
5.Greenways Advertising and Publicity
6.Ravi Publicity service
7. Accord Advertising
8.Adbureau aAdvertising
9.Madhu ads
10.Sobhagya advertising
2019ம் ஆண்டு கமிசன் வாங்கி தரும் ஏஜென்சிகள் பட்டியலில்
1.BRIGHT Advertising
2. Moulis Advertising service pvt ltd
3. Mark media Communication
ஆகிய மூன்று கமிசன் வாங்கி தரும் ஏஜென்சிகள் இணைக்கப்பட்டது. கமிசன் ஒழுங்காக வாங்கி தராத Greenways advertising and Publicity நீக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டும் 2019ம் ஆண்டு கமிசன் வாங்கி தரும் ஏஜென்சிகள் பட்டியலே நீடிக்கிறது.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மூலம் மாஸ்க் கொள்முதலுக்கு தினத்தந்தியிலும், தி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிலும், BRIGHT Advertising லிமிட் மூலம் தம்மாத் தூண்டு விளம்பரம் ரூ11,12,434(ரூ11.12இலட்சம்) கொடுக்கப்பட்டது. இதில் செய்தித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த கமிசன் ரூ2 இலட்சம்… BRIGHT Advertising தற்போது அதிகாரமையத்தில் வலம் வருகிறது.
இப்படி செய்தித்துறை அதிகாரிகளுக்கு ,விளம்பரங்கள் கொடுக்கும் ஏஜென்சிகள் மூலம் ஆண்டுக்கு கிடைக்கும் கமிசன் தொகை ரூ10கோடி…
தமிழக அரசில் சம்பளம் வாங்கிக்கொண்டு, சொகுசு வாழ்க்கை வாழ விளம்பரங்கள் மூலம் இலஞ்சம்/கமிசன் வாங்கும் செய்தித்துறை அதிகாரிகளுக்கு இனி முதலமைச்சரின் சிறப்பு விருது கொடுத்து கெளரவிக்கலாம்..
பாக்ஸ்…

செய்தித்துறை இயக்குநர் ஊழல் மன்னர் பி.சங்கர் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு, பாஸ்கரபாண்டியன் ஐ.ஏ.எஸ் செய்தித்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்..