Breaking News
Home / பிற செய்திகள் / செய்தித்துறையா.. ஊழல் துறையா… பி. சங்கர் ஐ.ஏ.எஸ் “FECKLESS”- மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் “DEADBEAT”- SRMU கண்ணையாவுக்கு பிரஸ் பாஸ்..

செய்தித்துறையா.. ஊழல் துறையா… பி. சங்கர் ஐ.ஏ.எஸ் “FECKLESS”- மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் “DEADBEAT”- SRMU கண்ணையாவுக்கு பிரஸ் பாஸ்..

    தமிழக அரசில் வெளியே எதுவும் தெரியாமல்  ஊழல் நடக்கும் துறை செய்தித் துறை..ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விளம்பரங்கள், தனியார் ஏஜென்சி மூலம் கொடுக்கப்படுகிறது. விளம்பரங்களை வெளியிடும் நாளிதழ்கள் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் கமிசன் கொடுக்க வேண்டும். சிறிய பத்திரிகைகளுக்கு கமிசன் 50சதவிகிதம்..

  தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை, மாஸ்க் கொள்முதலுக்கு தினந்தந்தி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிலும் ரூ11.12இலட்சத்துக்கு, பிரைட் விளம்பரம் நிறுவனம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ11.12 இலட்சத்துக்கு செய்தித்துறை அதிகாரிகள் பெற்ற கமிசன் ரூ2.80 இலட்சம்.

    பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அட்டை வழங்க, குழு அமைக்காமலேயே கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கள் இஷ்டம் போல், அங்கீகார அட்டை வழங்கி வந்தார்கள். அங்கீகார அட்டை வழங்க குழு அமைக்க வேண்டும் என்று சென்னை  உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் பொதே, குழு அமைக்காமல், அங்கீகார அட்டை வழங்க, செய்தித்துறை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி, செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் அரசாணை வெளியிட்டு உள்ளார்.

  1.  மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் டாமின் நிர்வாக இயக்குநராக இருக்கும் போது, அடித்த ஊழல் கூத்தால் டாமினுக்கு மூடு விழா நடத்தும் நிலைக்கு போய்விட்டது. டாமின் நிர்வாக இயக்குநராக இருந்த  வள்ளலார் ஐ.ஏ.எஸ், ரூ50கோடிக்கு ஊழல் செய்தார். அதில் முக்கிய ஊழல்  செவ்வாத்தூர் வெர்மிகுலைட் சுரங்கத்தில் வெர்மிகுலைட் 5300 டன் இருப்பு உள்ளதாக  கோப்புகளில் மட்டும் உள்ளது. ஆனால் சுரங்கத்தில் ஒரு கிலோ கூட இல்லை.

வெர்மிகுலைட் ஊழல் மீது நடவடிக்கை எடுக்காமல், ஊழல் கோப்பை, வள்ளலார் ஐ.ஏ.எஸ்க்கு சாதகமாக எழுதி மூடியவர்தான் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ்…

  இதனால் இவரிடம் நியாயம் எதிர்பார்க்க முடியாது…

  • இயக்குநர் பி.சங்கர் ஐ.ஏ.எஸ், செய்தித்துறையின் ஊழல் மன்னர்..அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனிடம் அடிக்கும் கொள்ளையை தனியாக செய்தியாக பார்க்கலாம். இந்த இலட்சணத்தில் பத்திரபதிவுத்துறை ஐ.ஜி பதவியும் கொடுத்துள்ளார்கள்..இப்படி மூன்று பெரிய துறைகளை  பதவி உயர்வில் ஐ.ஏ.எஸ்யான சங்கர் ஐ.ஏ.எஸ்யால் நிர்வாகத்தை பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்தான் பதில் சொல்ல வேண்டும்..

பி.சங்கர் ஐ.ஏ.எஸ் பெரம்பலூர் மாவட்ட டி.ஆர்.ஒ இருக்கும் போது, எம்.ஆர்.எப் டயர் கம்பெனிக்கு நிலம் வாங்கி கொடுத்த ஊழல் சிக்கியவர் .முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராஜாவுடன் அடிச்ச  ஊழல் கூத்தை இன்னும் பெரம்பலூர் மக்கள் மறக்கவில்லை.  

    1991-96 அதிமுக ஆட்சியில் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த கு.ப.கிருஷ்ணன் செய்த ஊழலை தாக்குபிடிக்க முடியாமல், முதல்வர் ஜெயலலிதா கு.ப.கிருஷ்ணன் வீட்டில் ரெய்டு நடத்தினார். சில நாட்கள் வீட்டிலேயே சிறை வைத்திருந்தார். அந்த கு.ப.கிருஷ்ணன் மருமகன் தான் இயக்குநர் சங்கர் ஐ.ஏ.எஸ்…ஊழல் மன்னர் பெயர் சரிதானே..           

   இதில் என்ன வேடிக்கை என்றால் சதர்ன் இரயில்மே மஸ்தூர் யூனியனின் தலைவர் கன்னையாவுக்கு நுகர்விழி என்ற பத்திரிகை பெயரில் பிரஸ் பாஸ் அடையாள அட்டை கொடுத்திருக்கிறார்கள்.. கண்ணையாவுக்கு பிரஸ் பாஸ் அடையாள அட்டையா என்று பல்லு சுளுக்கும் அளவுக்கு சிரிக்கிறார்கள்.

 2020ம் ஆண்டுக்கான பிரஸ் பாஸ், அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில்தான் கொடுத்தார்கள். ஹலோகிராம்  இல்லாத டூபாக்கூர் பிரஸ் பாஸ். இனி சிகரட் அட்டையில்  இயக்குநர் கையெழுத்து போட்டு பிரஸ்பாஸ் கொடுத்தாலும் கொடுப்பார்கள்..

 இப்ப.. சொல்லுங்க… செய்தித்துறையா.. ஊழல் துறையா…

Comments

comments

About mani bharathi

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *