Breaking News
Home / பிற செய்திகள் / தனி நபர் கழிப்பறையில் ஊழல்.. பேரூராட்சி இயக்ககத்தில் ரூ229 இலட்சம் சரண்டர்.. தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மோசம்.. சேலம் மாநகராட்சியில் ரூ40.24இலட்சம் மோசடி. மத்திய தணிக்கைத்துறை அறிக்கை..

தனி நபர் கழிப்பறையில் ஊழல்.. பேரூராட்சி இயக்ககத்தில் ரூ229 இலட்சம் சரண்டர்.. தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மோசம்.. சேலம் மாநகராட்சியில் ரூ40.24இலட்சம் மோசடி. மத்திய தணிக்கைத்துறை அறிக்கை..

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில், தனி நபர் கழிப்படம் கட்ட ரூ4000 மானியம் அளிக்கப்பட்டு வந்தது.  தனி நபர் கழிப்பிடம் திட்டத்தில் தமிழகத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகளில் ஊழல் நடந்துள்ளது. மேலும் மத்திய அரசு மானியமாக  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி சரண்டர் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் கூறியுள்ளது.

  1. பேரூராட்சிகளில் இயக்குநரகத்தின் கீழ் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில்  37 பேரூராட்சிகளில் 14,732 தனி நபர் கழிப்பறைகள் கட்ட மத்திய அரசு மானியம் அளித்தது.  ஆனால் மூன்று மாவட்டங்களில் பேரூராட்சி நிர்வாகத்தின் திறமையற்ற நிர்வாகத்தால் 3820 கழிப்பிடங்கள் கட்டாமல் ரூ229இலட்சம்(ரூ.2.29கோடி) மத்திய அரசிடம்  திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது.
  2. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7247 தனி நபர் கழிப்பிடம் கட்ட 2016-17ம் ஆண்டில்  கொடுக்கப்பட்ட மானியம் ரூ.2.89கோடி. ஆனால் 6183 தனி நபர் கழிப்பிடம் மட்டுமே கட்டப்பட்டு உள்ளது. 1064 தனி நபர் கழிப்பிடம் கட்டாத காரணத்தால் ரூ42.56இலட்சம் மத்திய அரசிடம் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது.
  3. தூத்துக்குடி மாநகராட்சிக்கு கம்யூனிட்டி கழிப்பறை கட்ட 1.11.2016ல் ரூ18.20 இலட்சமும், 04.08.2017ல் ரூ18.816 இலட்சம் மத்திய அரசு மானியமாக விடுவித்தது. ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம், கம்யூனிட்டி கழிப்பறைகளை கட்டாமல், மத்திய அரசு மானியமாக கொடுத்த ரூ37.20 இலட்சத்தை செலவு செய்யாமல், வங்கி கணக்கில் வைத்துள்ளது.

மேலும் தனி நபர் கழிப்படங்கள் கட்டுவதில் மோசமான நிர்வாக செயல்பாடுகளாக உள்ளது. 9.11.2017ல் வரை ஆக்ஸிஸ் வங்கி கணக்கில் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ47.14 இலட்சம் செலவு செய்யாமல் வைத்துள்ளது.

  தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மிகவும் மோசம் என்று மத்திய அரசு தணிக்கைத்துறை அறிக்கையில் கூறியுள்ளது.

  • சேலம் மாநகராட்சியில் 2390 தனி நபர் கழிப்பிடம் கட்ட, மத்திய,மாநில அரசு மானியம் முழுவதையும் பெற்றுக்கொண்டது. ஆனால் 120 பயனாளிகளுக்கு இரண்டாது, மூன்றாவது தவணை மானிய தொகை கொடுக்கவில்லை. இதே போல் 251 பயனாளிகளுக்கு மானிய தொகைகளை கொடுக்காமல் ரூ40.24 இலட்சம் மோசடி நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

      முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா தலைமையில் செயல்படும் தமிழக அரசு நிர்வாகத்தில், இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசின் தணிக்கைத்துறை தனது அறிக்கையில் தனி நபர் கழிப்படத்தில் ஊழல் நடந்துள்ளது, உள்ளாட்சி நிர்வாகம் மோசம், மத்திய அரசின் மானியத் தொகை சரண்டர் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளதை பார்க்கும் போது, வேடிக்கையாக உள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

தூத்துக்குடி அமைச்சர் கடம்பூர் ராஜ் அத்துமீறல்.. சட்டத்துக்கு புறம்பான கட்டிடத்தை- திறந்து வைத்த அமைச்சர்…

தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆளும் அதிமுகவின் பின்னணியில்   சட்டத்துக்கு புறம்பான பல நிகழ்வுகள் தினமும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தன்ராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *