
நாமக்கல் ஆட்சித் தலைவர் வளாகத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ260கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் இரண்டாவது தளத்தின் பணிகள் (சத்தியமூர்த்தி &கோ) 30.10.2020ம் தேதி அதிகாலை, இடிந்து விழுந்தது.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணியை சத்தியமூர்த்தி&கோ 3 பணிகளுக்கான டெண்டர் ரூ117.90கோடியும், பி.எஸ்.தென்னரசு இன்ஜினியரிங் கன்ஸ்டிரக்சன் ஆறு பணிகளுக்கான டெண்டர் ரூ141.76கோடிக்கான பணிகளை டெண்டர் எடுத்து, கட்டுமான பணிகளை செய்து வருகிறது.
சத்தியமூர்த்தி&கோ கட்டிவரும் கட்டுமான பணி 500 படுக்கைகள் கொண்ட வார்டு, தரைத்தளம் மற்றும் ஆறு தளம். கட்டிடத்தின் உயரம் 27.30 மீட்டர். 24,651 சதுர மீட்டர் இதில் முதல் தளத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், இரண்டாவது தளம் பணிகள் நடந்துக்கொண்டு இருக்கும் போது, இரண்டாவது தளத்தின் முன் பகுதி இடிந்து விழுந்தது. இடிந்த நேரம் அதிகாலை என்பதால், கட்டுமான பணிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்த ஐந்து வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்தார்கள்.
நாமக்கல் நகராட்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சேலம் நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்.4162/2019/சேம3 நாள் 14.10.2019 கடிதத்தின் படி நகரளவை எண்.28,34,35மற்றும் 36 பகுதியில் 9.67 ஏக்கரில் கட்டிடம் கட்ட நகர் மன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அப்ரூவல் அளிக்கப்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தி&கோ நிறுவனத்தின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு, உள்ளிட்ட பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக, வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.
25 சதவிகிதம் கமிசன் கொடுத்தால், கட்டுமான பணி எப்படி இருக்கும்.. இப்படிதான் அடிக்கடி இடிந்து விழும் என்று சத்தியமூர்த்தி வெளிப்படையாகவே கூறியதாக தெரிகிறது.
நாமக்கல் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை கட்டிடம் இடிந்த விழுந்ததை தொடர்ந்து, வி.சத்தியமூர்த்தி&கோவுக்கு தடை விதித்து, தமிழக மக்களிடம் நல்ல பெயர் எடுத்துக்கொள்ளமாலா என்று ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் அமைச்சர் தங்கமணியின் எதிர்ப்பால், வி.சத்தியமூர்த்தி&கோவின் கட்டுமான பணிக்கு தடை விதிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வி.சத்தியமூர்த்தி & கோ, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் பினாமி என்றும் தங்கமணியின் கோடிக்கணக்கில் பணம், வி.சத்தியமூர்த்தி&கோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக, வருமான வரித்துறைக்கு கிடைத்த ஆவணங்களின் பேரில், வி.சத்தியமூர்த்தி&கோ வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்துள்ளதாக தெரிகிறது.

சத்தியமூர்த்தியின் மகன் ஆனந்தவடிவேலுவும், அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ் இருவரும் கூட்டணியாக பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ், அதிமுக ஆதரவு டிவியின் முக்கிய பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது..

மத்திய அரசின் வருமான வரித்துறை, அமைச்சர் தங்கமணி மற்றும் மருமகன் தினேஷ், மகன் தரணி தரனுக்கு குறிவைத்துள்ளது.