
நாமக்கல் ஆட்சித் தலைவர் வளாகத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ260கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளில் இரண்டாவது தளத்தின் பணிகள் (சத்தியமூர்த்தி &கோ) 30.10.2020ம் தேதி அதிகாலை, இடிந்து விழுந்தது. கட்டுமான பணி நடந்துக்கொண்டு இருக்கும் போது இடிந்து விழுந்திருந்தால் பலர் பலியாகி இருப்பார்கள்.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணியை சத்தியமூர்த்தி&கோ 3 பணிகளுக்கான டெண்டர் ரூ117.90கோடியும், பி.எஸ்.தென்னரசு இன்ஜினியரிங் கன்ஸ்டிரக்சன் ஆறு பணிகளுக்கான டெண்டர் ரூ141.76கோடிக்கான பணிகளை டெண்டர் எடுத்து, கட்டுமான பணிகளை செய்து வருகிறது.
சத்தியமூர்த்தி&கோ கட்டிவரும் கட்டுமான பணியில் முதல் தளத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், இரண்டாவது தளம் பணிகள் நடந்துக்கொண்டு இருக்கும் போது, இடிந்து விழுந்தது. வட மாநில தொழிலாளர் பலர் படுகாயம் அடைந்து, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..
திருச்சி நீதிமன்றத்தில், விசாரணை நடக்கும் போது, நீதிபதிக்கு முன்பு, சிமெண்ட் கான்கிரிட் இடிந்து விழுந்தது. பிறகு கமிசன் அமைக்கப்பட்டு, கட்டுமான பணியை மீண்டும் செய்து கொடுத்தது வி.சத்தியமூர்த்தி&கோ என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தியமூர்த்தி&கோ நிறுவனத்தின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு, உள்ளிட்ட பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக, வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.
அதிமுகவின் ஆதரவு டிவி அலுவலகத்தின், அடுத்துள்ள பி.எஸ்.தென்னரசுவின் பங்களாவில்தான் வி. சத்தியமூர்த்தி, பி.எஸ்.தென்னரசு, அமைச்சர் தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய நான்கு பேரும் கூடி, அடிக்கடி ஆலோசனை செய்வார்கள். கமிசன் பரிமாற்றங்களும் நடக்கும்.
பி.எஸ்.தென்னரசு தமிழகம் முழுவதும் ரூ550கோடி மதிப்பிலான பணிகள் நடக்கிறது. தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள பணிகளை டெண்டர் எடுத்தால் 25 சதவிகிதம் கமிசன் கொடுக்க வேண்டுமாம்.
25 சதவிகிதம் கமிசன் கொடுத்தால், கட்டுமான பணி எப்படி இருக்கும்.. இப்படிதான் அடிக்கடி இடிந்து விழும்.
வி.சத்தியமூர்த்தி & கோ, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் பினாமி என்றும் தங்கமணியின் கோடிக்கணக்கில் பணம், வி.சத்தியமூர்த்தி&கோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக, வருமான வரித்துறைக்கு கிடைத்த ஆவணங்களின் பேரில், வி.சத்தியமூர்த்தி&கோ வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்துள்ளதாக தெரிகிறது.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடம் 30.10.2020 அதிகாலை இடிந்து விழுந்ததும், என்ன நடந்தது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் தங்கமணி, சம்பவம் நடந்த இடத்திலிருந்து வெல்டிங் விட்டு போய் இருந்தது, இதை பார்த்த அதிகாரிகளே இடித்தார்கள் என்று பேட்டி கொடுத்தார். அதிகாரிகளே இடித்தால், வட மாநில தொழிலாளர் பலர் எப்படி படுகாயமடைந்தார்கள்?
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சத்தியமூர்த்தி&கோவின் கட்டுமான பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று மக்கள்செய்திமையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.
பாக்ஸ்…
ஜனவரி 2021க்குள் அனைத்து கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்பதால், 11 அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளும் தரமில்லாமல், அவசர கோலத்தில் நடக்கிறது.