
சில மணி நேரம் பெய்த மழைக்கு, சென்னை மாநகரம் முழுவதும், மூழ்கியது. கடந்த 10ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியை நவீன சென்னையாக மாற்றியதாக ஸ்மார்ட் சிட்டி, மழை நீர் வடிகால்வாய்கள், சாலை மேம்பாடு என்ற பெயரில் ரூ500கோடி போலி பில் போட்டு கொள்ளையடித்த அதிகாரிகளால்தான் சென்னை மாநகரம் மழை நீரில் மூழ்கியது.



ரூ500கோடி போலி பில் கொள்ளையால் சென்னை சில மணி நேர மழையில் மூழ்கி தத்தளிக்க காரணமாக இருந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், பிரகாஷ் ஐ.ஏ.எஸ் மற்றும் தலைமை பொறியாளராக பணியாற்றி புகழேந்தி, மழை நீர் வடிகால்வாய் ஊழல் புகழ் தலைமைப் பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் படி கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்..