Breaking News
Home / பிற செய்திகள் / அரசு பணிகள் விற்பனையா?- அதிமுகவினரை நியமிக்க முடிவா?- 2 இலட்சம் பணியிடங்களை நிரப்ப முடிவு.. அரசு ஆணை எண்.382ல் திருத்தம்..

அரசு பணிகள் விற்பனையா?- அதிமுகவினரை நியமிக்க முடிவா?- 2 இலட்சம் பணியிடங்களை நிரப்ப முடிவு.. அரசு ஆணை எண்.382ல் திருத்தம்..

கொரோனா ஊரடங்கு உத்தரவு 24.3.2020 முதல் 28.10.2020 வரை பங்கு வடிவிலான பிணைப்பத்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ள கடன் ரூ40,000கோடி..இதனால் கொரோனாவுக்கு அதிகம் செலவு செய்யப்பட்டுள்ளதால்,  காலி இடங்களின் அடிப்படையில் புதிய பணியிடங்களை   உருவாக்கி, நியமனம் செய்ய தடைவிதித்து நிதித்துறையில் அரசாணைஎண்.248/20.05.2020ல் வெளியானது. பணியில் இருக்கும் போது, இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மட்டும், பணிகளில் நியமனம் செய்ய Staff Committee அப்ரூவல்  பெற்று நியமனம் செய்யலாம் என்று அரசாணை 248ல் கூறப்பட்டுள்ளது.

 இந் நிலையில்  2021 சட்டமன்றத் தேர்தல் வருவதால், அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆளும் அதிமுகவின் நிர்வாகிகள் சிபாரிசு செய்பவர்களுக்கு, அரசு பணிகளில் நியமித்தால் மட்டுமே, தேர்தலை சந்திக்க முடியும் என்று அதிமுக மூத்த அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா மூலம் தலைமைச் செயலாளருக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.

 தமிழக அரசு திவாலானாலும் பரவாயில்லை, தொடக்க நிலையில்/ஆரம்ப நிலையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருக்கும் பணியிடங்களை Staff Committee அப்ரூவல்  பெற்று நியமனம் செய்யும், நிதித்துறையில் அரசாணையில் திருத்தம் செய்து, 24.10.2020ல் அரசாணை எண்.382 வெளியிடப்பட்டுள்ளது.

   ஒய்வு பெற்றவர்களுக்கு, ஒய்வூதிய பலன்கள் கொடுக்க ரூ5000கோடி நிதி இல்லை என்று ஒய்வூதிய வயதை ஒராண்டு நீட்டித்து, உத்தரவிட்ட தமிழக அரசு தொடக்க நிலையில்/ஆரம்ப நிலையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப உத்தரவிட்டது எப்படி?

  தொடக்க நிலை/ஆரம்ப நிலையில் உள்ள(Entry Level vacant post) காலி இடங்கள் என்பது இளநிலை உதவியாளர், அலுவலக ஊழியர், டிரைவர், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர்(தலையாரி) இப்படிப்பட்ட பணியிடங்கள்..

  தொடக்க நிலை/ஆரம்ப நிலை(Entry Level vacant post) இரண்டு இலட்சம் பணியிடங்களை நிரப்ப, முடிவு செய்யபப்ட்டுள்ளதாக தெரிகிறது.

 ஒரு இலட்சம் பணியிடங்களையும், ஆளும் அதிமுகவினர் மூலம் விற்பனை செய்யலாம் அல்லது ஆளும் அதிமுகவினர் சிபாரிசு செய்பவர்களை நியமினம் செய்யவும்,  முதல்வரின் ஒப்புதலுடன் வாய் மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

 வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருந்தால் போது, சீனியாரிட்டி தேவையில்லை. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யவில்லை என்றாலும் அலுவலக உதவியாளர் பணியில் நிரப்ப வாய் மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற அமைக்கப்பட்ட வியூகத்தில், கொரோனாவினால் கட்டுப்படுத்த முடியாத செலவை மீறி,  இரண்டு இலட்சம் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

 தமிழக அரசு திவாலானாலும் பரவாயில்லை…. 2021 சட்டமன்றத் தேர்தல் அதிமுக மீண்டும் வெற்றி பெற சட்டவிரோதமான அதிமுக அரசின் செயல்பாடுகளுக்கு, மூத்த, அனுபவம் பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் துணை போவதுதான் வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

ஊரக வளர்ச்சித்துறை… முத்துமீனாள், வீரபத்ரன், விஜயலட்சுமி-கூட்டணியின் ஊழல் ஆட்டம்…

  ஊரக வளர்ச்சி ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக இருக்கும் முத்துமீனாள்(ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) தம்பி மனைவி), உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றிய …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *