Breaking News
Home / பிற செய்திகள் / முதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…

முதலமைச்சர் நிவாரண நிதியில்- என்னதான் நடக்கிறது… 29.07.91 நிதித்துறை கடிதம் குப்பைக் கூடையிலேயே…

 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காவல்துறையிலிருந்து அளிக்கப்பட்ட ரூ8.50கோடி திருப்பி அளிக்க, முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் படி ரூ8.50 கோடி திருப்பி காவல்துறை அளிக்கப்பட்டது. ஆனால் ரூ8..50கோடியில் நன்கொடை கொடுத்தவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.. ஏன்?.. என்னாச்சு ரூ8.50கோடி…

  முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து யார்.. யாருக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று நிதித்துறை செயலாளராக இருந்த நாராயணன் ஐ.ஏ.எஸ் 29.07.1991ல் நிதித்துறையிலிருந்து கடிதம் அனுப்பி வெளியிட்டுள்ளார்( Letter No.68299/Finance(CMPRF)/91-1 dated 29.07.91).

  The procedure to be followed for sanction of assistance from Chief minister’s Public Relief fund is reiterated in the following paragraph for Guidance…

 As relief/grant from the fund is sanctioned for a variety of reasons such as NATURAL CALAMITIES, COMMUNAL CLASHES, ACCIDENTS INCLUDING EXPLOSIVE ACCIDENTS, BOMB BLASTS,  DECOIT RAID, ATTACK BY THE WILD ANIMALS, COSTLY SURGERY AND OTHER MEDICAL TREATMENTS, FACTORY/MILL LOCKOUTS/LAY OFF PUBLIC CAUSES SERVED BT CERTAIN INSTITUTION…

The orders sanctioning assistance have to be issued by the department  of the secretariat concerned by the following the prescribed procedure..

அதாவது இயற்கை சீற்றங்கள், ஜாதி ரீதியான மோதன், விபத்து, வெடிக்குண்டுகளால் நிகழும் விபத்து, வழிப்பறி, வன மிருங்களால் தாக்கப்படுதல், பெரிய ஆபரேசன், மூடிய தொழிற்சாலைகள் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதி கொடுக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

  நிவாரண நிதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

 மாவட்ட ஆட்சித் தலைவர் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது, ஜாதி, மதம் ரிதியான மோதல்( தாழ்த்தபட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர்) சொத்துக்கள் பாதிக்கப்படும் போது நிவாரணம் கொடுக்க முடிவெடுக்கலாம்.

 ஆனால் முதலமைச்சர் பொது நிவாரண நிதி 29.07.91ல் உள்ள கடிதத்தில் உள்ள விதிமுறைகளை பின்பற்றாமல், ஆளும்கட்சியின் வாக்குவங்கிக்காக நிவாரணம், முறைகேடாக கொடுக்கப்படுகிறது.

  நிதித்துறை செயலாளர் நாராயணனின் 29.07.91க்கு கடிதத்தில் உள்ள விதிமுறைகளில் மாற்றம் செய்து அல்லது திருத்தம் செய்து, கடந்த 30 ஆண்டுகளில் எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை.

   29.07.91ன்கடிதத்தில் உள்ள விதிமுறைகளின்படி  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம் கொடுக்க முடியுமா..

  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதால் பலியான இருவருக்கும் நிவாரணம் கொடுக்க முடியுமா..

 இப்படி பல கேள்விகள் எழுந்துள்ளது.. இதற்கு எல்லாம் தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் இருவரும்தான் பதில் அளிக்க வேண்டும்..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *