Breaking News
Home / பிற செய்திகள் / ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….

ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்- அதிமுக அரசின் ஊழல்.. அரசு ஆணையில் 13.48கோடி மாஸ்க்.. கொள்முதல் ஒப்பந்தம் 2.19கோடி….

முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து சட்ட விரோதமாக, 2.08 கோடி ரேசன் கார்டுகளில் உள்ள 6.74 உறுப்பினர்களுக்கு தலா இரண்டு மாஸ்க் என 13.48கோடி மாஸ்க் கொள்முதல் செய்து  விலை இல்லாமல் கொடுக்க ரூ28கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 ஆகஸ்டு மாதம் இறுதியில் ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் மாஸ்க் கொள்முதல் செய்யும் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, செப்டம்பர் 5ம் தேதி முதல் சென்னை மாநகராட்சியை, தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

 ஆனால் சில இடங்களில் மட்டும் மாஸ்க் ரேசன் கடைகளில் கொடுக்கப்பட்டது. 1.80கோடி ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாத மாஸ்க் கொடுக்கவேவில்லை.

 13.48கோடி மாஸ்க் கொள்முதல் செய்யப்பட்டதா என்று நாம் ஆய்வு செய்த போது கிடைத்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது. 2.19கோடி மாஸ்க் கொள்முதல் செய்ய மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

  2.19கோடி கோவணத்துணி போல மாஸ்க்கை  வைத்துக் கொண்டு 6.74 கோடி ரேசன்கார்டு உறுப்பினர்களுக்கு  தலா இரண்டு என 13.48கோடி மாஸ்க் எப்படி கொடுக்க முடியும். தமிழக மக்களை ஏமாற்ற அளவே இல்லையா?

  13.48கோடி மாஸ்க் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. சிங்கள் லேயர் 3 போல்டு – 2 பிளை காட்டன் மாஸ்க் கோடிக்கணக்கில் கொள்முதல் செய்யும் போது, அதிகபட்ச விலை ரூ4க்கு சப்ளை செய்ய பல நிறுவனங்கள் இருக்கும் போது, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் இருவரும் அடித்த ஊழல் கூத்தில் ஒரு மாஸ்க் ரூ6.45 + 5% ஜி.எஸ்.டி என ரூ6.77க்கு கொள்முதல் செய்ய முடிவு செய்தார்கள்.

ஒரு மாஸ்க் விலை ரூ2.45 அதிகம். கொள்முதல் செய்த 2.19கோடி மாஸ்க் விலையை  கணக்கீட்டால் ரூ4.70கோடி விலை அதிகம்.. அதாவது ரூ4.70கோடி கமிசனாக/இலஞ்சமாக பெறப்பட்டுள்ளது.

 13.48கோடி மாஸ்க் டெண்டரில் 46 நிறுவனங்கள் கலந்து கொண்டது. தொழில்நுட்ப் புள்ளியில் தேர்வு செய்யப்பட்ட 6 நிறுவனங்களின் விலைப்புள்ளி உறைகள் பிரிக்கப்பட்டது.

 1.  ராயல் கிளாசிக் மில்ஸ் பிரைவேட் லிமிட், கட்டபாளையம் திருப்பூர் இந்த நிறுவனம் மாஸ்க் விலை ரூ6.45 எல்-1 ஆக தேர்வு செய்யப்பட்டது.

2.  எல்-2வாக இருக்கும் பான்பேப் டெக்ஸ்டைல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட், பல்லடம், திருப்பூர் நிறுவனமும் ரூ6.45க்கு மாஸ்க் சப்ளை செய்வதாக எழுத்து மூலம் கூறியது.

 ராயல் கிளாசிக் மில்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்திடம் 2,17,50,000(2.17கோடி) மாஸ்க் ரூ6.45+5% ஜி.எஸ்.டியுடன் ரூ6.77க்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.

  பான்பேப் டெக்ஸ்டைல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட் பல்லடம் நிறுவனத்திடம்  ரூ6.77விலைக்கு 2,10,000(2.10இலட்சம்) கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.

  இரண்டு நிறுவனத்திடம் மாஸ்க் கொள்முதல் செய்ய, போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி மாஸ்க்கின் எண்ணிக்கை 2,19,60,000(2.19கோடி)

  ஆனால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில்ரிநுது 09.06.2020ல் வெளியான அரசாணை எண்.287ல் 2.08 கோடி ரேசன் கார்டுகளுக்கு 13.48கோடி மாஸ்க்  கொள்முதல் செய்து விலை இல்லாமல் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 ஆனால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் மாஸ்க் கொள்முதல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் எண்ணிக்கை 2.19கோடி மட்டுமே..

 2.19 கோடி மாஸ்க் வைத்துக்கொண்டு 2.08 ரேசன் கார்டுகளில் உள்ள 6.74கோடி உறுப்பினர்களுக்கு தலா 2 மாஸ்க் என 13.48கோடி மாஸ்க் எப்படி கொடுக்க முடியும்.

   மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, அமைச்சர் உதயகுமார், ஆணையர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ்  மூவர் அணி  தமிழக மக்களை எப்படி ஏமாற்றியுள்ளார்கள்.. பாருங்கள்..

 இந்த இலட்சணத்தில் அடுத்த கொள்ளையை அரங்கேற்ற மீண்டும் மாஸ்க் ரூ60கோடிக்கு  மாஸ்க் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளார்கள்..

         எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த தமிழ்நாட்டிலே…

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *