Breaking News
Home / பிற செய்திகள் / தமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..

தமிழக அரசின்- தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யின்- துக்ளர் தர்பார் நிர்வாகம்.. ஜால்ரா சங்கர் ஐ.ஏ.எஸ்க்கு- குவியும் பொறுப்புகள்..

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் நிர்வாகம் துக்ளக் தர்பார் நிர்வாகம் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ், திமுக ஆட்சியில் நுகர்பொருள்வாணிபக் கழகத்தில் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய போது, தன் மச்சான், தம்பி மனைவி  மற்றும் உறவினருக்காக 20க்கு மேற்பட்ட பணியிடங்களை உருவாக்கி நியமித்தார். சண்முகம் ஐ.ஏ.எஸ் நியமித்த 20 பேரும், பணி இல்லாமல், சம்பளம் வாங்கிக்கொண்டு  வெட்டி பொழுதை கழிக்கிறார்கள்.

24.10.2020 இரவு 8மணியளவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாறுதல் ஆணை(எண்.3101/24.10.2020) வெளியாகி உள்ளது. இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாறுதல் ஆணையை பார்த்தவுடன் சண்முகம் ஐ.ஏ.எஸ் தலைமைச் செயலாளர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்பது வெளிச்சமாகியுள்ளது.

  1. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா ஐ.ஏ.எஸ், திருவள்ளூர் மாவட்டத்துக்கு மாறுதல், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மாறுதல். திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ், தன் கணவர் ரவிக்குமாரை நிழல் கலெக்டராக வைத்துக்கொண்டு அடித்த கொள்ளை பல கோடிகள்.. மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக மாற்றப்பட்டுள்ளார்..
  2. செய்தித்துறை இயக்குநர் சங்கர் ஐ.ஏ.எஸ் ஏற்கனவே அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் நிர்வாக இயக்குநர் பதவி கூடுதலாக பார்க்கிறார். இதனால் செய்தித்துறையில் உதவி பி.ஆர்.ஒ, பி.ஆர்.ஒ. துணை இயக்குநர் ஆட்டம் அதிகமாகி, அரசின் அடையாள அட்டைகள் இலஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த இலட்சணத்தில் சங்கர் ஐ.ஏ.எஸ் பத்திர பதிவுத்துறை ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் செய்தித்துறை இயக்குநர் பொறுப்பையும், அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன் பொறுப்பையும் மறு உத்தரவு வரும் வரை கூடுதலாக கவனிப்பாராம்.. சங்கர் ஐ.ஏ.எஸ் அப்படின்னா நிர்வாக திறமையானவாரா.. இல்லை.. ஜால்ரா போடுவதில் வல்லவர் என்பதில், கூடுதல் பதவிகள் கொடுக்கப்படுகிறது.

  அரசு அங்கீகார அடையாள அட்டை தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத சங்கர் ஐ.ஏ.எஸ் டம்மி பதவிக்கு மாற்றப்பட வேண்டியவருக்கு, மேலும் கூடுதல் பொறுப்பு கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது.

  • நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், நகராட்சி நிர்வாகத்தை விலை பேசி விற்பனை செய்து வருகிறார். நகராட்சி நிர்வாகம் ஊழலில் மூழ்கிவிட்டது.  நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திலேயே உயரதிகாரிகள் சிலர் தங்கள் அறைகளை சொகுசு விடுதியாக மாற்றிவிட்டார்கள். இப்படி நகராட்சி நிர்வாகத்தை சீரழித்துக்கொண்டுக்கு இருக்கும் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்க்கு டிபிட்கோ கூடுதல் பொறுப்பாம்..

இப்படி தமிழக அரசின் நிர்வாகத்தை சீரழித்துக் கொண்டு இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பபை கொடுத்து,  தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் தன் நிர்வாகம்  துக்ளக் தர்பார் நிர்வாகம் என்பதை உறுதி செய்தியு

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *