Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…

சென்னை மாநகராட்சி- மண்டலம் -10- மாநகராட்சி அதிகாரிகள் நடத்தும்- டூபாக்கூர் கொரோனா லேப்.. NEUBERG Ehrich LAB & AGS LAB…

சென்னை மாநகராட்சி முழுவதும் சென்னை மாநகராட்சியின் உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர்கள் டூபாக்கூர் கொரோனா ஆய்வுக் கூடம் நடத்தி, மிரட்டி அப்பாவி மக்களிடம் பணம் வசூல் செய்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 சென்னை மாநகராட்சி மண்டலம் -10ல் 70 வயதான தம்பதியரிடம், உங்கள் வீட்டு வேலைக்காரனுக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. உங்களுக்கு கொரோனா ஆய்வு எடுக்க வேண்டும் என்று டூபாக்கூர் லேபிலிருந்து வந்த மூன்று பேர் (ஒருவர் சீனிவாசன் மாநகராட்சி ஊழியர்) 22.10.2020 இரவு 7மணிக்கு  வந்து மிரட்டுகிறார்கள். நீங்கள் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்கள்.

 வயதான தம்பதியரிடம் கொரோனா ஆய்வு எடுத்துக்கொண்டு ரூ8000 மிரட்டி வாங்கி செல்கிறார்கள். பில் கேட்டார்கள், நாளைக்கு காலை ரிசல்ட் வந்துவிடும், அப்போது கம்ப்யூட்டர் பில் கொடுப்போம் என்று பதில் சொல்லிவிட்டு சென்றார்கள்.

 23ம் தேதி காலை 9மணிக்கு,  டூபாக்கூர் லேப் ஆட்களுடன், மாநகராட்சி ஊழியர் சீனிவாசன்,  சுகாதார ஆய்வாளர் ப்ரியா  மூவரும் வந்து கொரோனா ஆய்வில் பாசிடிவ் என்ற, கூறியபடி லேப் அறிக்கை காட்டுகிறார்கள். டூபாக்கூர் லேப் ஆட்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது, உதவி பொறியாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் குவிகிறார்கள்.

 வயதான தம்பதியருக்கு தெரிந்த நிருபர் வர, டூபாக்கூர் லேப் ஆட்கள்  என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்,  உடனே  உதவி பொறியாளர் ஜெய்க்குமார், டூபாக்கூர் ஆய்வகத்துக்கு ஆதரவாக பேசி, அவர்களை தப்பிக்க வைத்தார்.  டூபாக்கூர் ஆய்வக கும்பலில் இருந்த  சுகாதார ஆய்வாளர் ப்ரியாவையும் தப்பிக்க வைத்தார் உதவி பொறியாளர் ஜெயக்குமார்.

  மீண்டும் வயதான தம்பதியருக்கு, மாநகராட்சி மூலம் கொரோனா ஆய்வு எடுத்து செல்கிறார் உதவி பொறியாளர் ஜெயக்குமார். இரண்டு நாட்களில் கொரோனா ரிசல்ட் வரும், வீட்டோடு இருங்கள் என்று அட்வைஸ் செய்துவிட்டு சென்றார்.

 டூபாக்கூர் லேப் அசோக் நகர் மெயின்ரோடு, கோடம்பாக்கத்தில் AGS Diagnostics lab பணியாளர்கள் கொரோனா ஆய்வு எடுக்கிறார்கள். அந்த பெயரில் பில் கொடுக்கிறார்கள். ஆனால் கொரோனா ஆய்வு NEUBERG Ehrich LAB இராயப்பேட்டையில் செய்யப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது NEUBERG Ehrich LAB டூபாக்கூர் லேப்களை புரோக்கராக நியமித்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  உதவி பொறியாளர் ஜெயக்குமார், டூபாக்கூர் லேப் AGS Diagnostics lab மீது புகார் கொடுத்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?.. அந்த வயதான தம்பதியினரிடம் டூபாக்கூர் கொரோனா  லேப் வசூல் செய்த ரூ8000/ -திருப்பி வாங்கி கொடுத்திருக்க வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் போது, டூபாக்கூர் கொரோனா லேப்புக்கும், உதவி பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரியா, சீனிவாசனுக்கு  தொடர்பு இருப்பது உறுதியாகிறது.

 இப்படி வயதானவர்கள், அப்பாவி மக்களிடம் டூபாக்கூர் கொரோனா லேப், மூலம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  மெகா வசூல் செய்கிறார்கள்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -10, உதவி பொறியாளர் ஜெயக்குமார் இருந்த சுகாதாரப்பணியாளர்கள்.. என்ன சார் செய்ய… மண்டலம் -10ன் மண்டல அதிகாரி ஜெய்பீம்க்கும், சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் ஜெகதீசனுக்கும் மாமூல் கொடுக்க வேண்டும் சார் என்று முணு, முணுத்தார்கள்.

வயதான தம்பதிகளை உதவி பொறியாளர் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர் ப்ரியா இருவரும் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்..

 சென்னை மாநகராட்சியில் மண்டலம்-10 ல் உதவி பொறியாளர் ஜெயக்குமார்,  சுகாதார பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் ப்ரியா, மாநகராட்சி ஊழியர் சீனிவாசன் கூட்டணி அமைத்து, டூபாக்கூர் கொரோனா லேப் வைத்து, அப்பாவி மக்களை மிரட்டி கொரோனா பெயரில் மெகா வசூல் நடக்கிறது.

 இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு, குளு.. குளு அறையில் ஒய்வெடுக்கிறார் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்…

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *