Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா?

கொரோனா அவசர சட்டத்தை மீறும் முதல்வர் மீது- ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா?

   கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த, மாஸ்க் அணிய வேண்டும், 3 அடி முதல்  6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, பேசுவது போல், நடிகர், நடிகைகளை வைத்து கோடிக்கணக்கில் செலவு செய்து, விளம்பரம் செய்கிறது தமிழக அரசு.

 கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த, மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அவசரச் சட்டமும் கொண்டு வரப்பட்டது.

 ஆனால் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது இல்லை. மாஸ்க் பெரும்பாலானவர்கள் அணிவது இல்லை. முதல்வரும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

  22.10.2020 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் கலந்து கொண்ட அரசு விழாவில் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. விராலிமலை தொடங்கப்பட்ட  ஐ.டி.சி தொழிற்சாலையை மாண்புமிகு முதல்வர் ரிப்பன் வெட்டி, சமூக இடைவெளி கடைபிடிக்கமால் திறந்து வைத்தார்.

 அதே போல்  கவிநாடு கண்மாயின் அருகே குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த பின்பு, விவசாயிகளிடம் உரையாடியபடியே மாட்டுவண்டி ஒட்டுகிறார். முதல்வர் சுற்றி சமூக இடைவெளி இல்லாமல், கும்பல், கும்பலாக நிற்கிறார்கள். மாஸ்க்கும்  பெரும்பாலானவர்கள் அணியவில்லை. புதுக்கோட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த மாவட்டம் என்பதால், கொரோனா தொற்று பயந்துக் கொண்டு ஒடிபோய்விடுமா என்ன?

 இப்படி சமூக இடைவெளியை கடைபிடிக்காத, மாஸ்க் அணியாத நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்வது சரியா…கொரோனா அவசர சட்டத்தை முதல்வரே மீறலாமா..

 புதுக்கோட்டையில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா கலந்து கொண்ட  அனைத்து நிகழ்ச்சிகளிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. மாஸ்க்கும் பெரும்பாலானவர்கள் அணியவில்லை.

  கொரோனா அவசர சட்டத்தை மீறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா  மீது, மேதகு ஆளுநர் பன்வாரிலால்புரோகித் நடவடிக்கை எடுப்பாரா?

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *