Breaking News
Home / பிற செய்திகள் / புதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..

புதுக்கோட்டை நகராட்சி… சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும்- ஆணையர் ஜஹாங்கிர் பாஷா. ..

   புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நாமக்கலில் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஜஹாங்கிர் பாஷா புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக பணி மாறுதலில் வந்தார்..

 புதுக்கோட்டை நகராட்சி ஆணையராக பதவியேற்றவுடன் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்தம் நிறுவனமான மதுரை மீனாட்சி நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்ய  பல லட்சம் லஞ்சம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது..
 மேலும் கொரோனா ஊரடங்கு உத்தரவினால்  கடைகள் மூடப்பட்டு கிடந்தது. வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். இந் நிலையில் புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் வரி வசூல் என்ற பெயரில் வணிகர்கள், வியாபாரிகளை ஆணையர்   மிரட்டுவதால்,  வணிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

 எந்த பணி, எந்த டெண்டராக இருந்தாலும், அவசர பணி என்ற பெயரில் டெண்டர் கோராமல் நகராட்சி அவசர சட்டம் 15ன் கீழ் மேற்க்கொள்கிறார். மன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றுகிறார். கமிசனுக்காக நகராட்சி அவசர சட்டம் 15 ஐ பயன்படுத்துகிறார் என்பதுதான் உண்மை.  கொரோனா காலம் முடிவடைந்துவிட்டது. இனி நகராட்சி அவசர சட்டம் 15யை பயன்படுத்துவது எந்த வித நியாயமே கிடையாது..சட்ட விரோதமாகும்..
 சரியாக வேலை பார்ப்பது போல வெளியே காட்டிக் கொண்டு உள்ளே லஞ்ச வசூலில் கராராக இருப்பதாக புதுக்கோட்டை நகராட்சியில் எந்த பக்கம் திரும்பினாலும் பேசிக்கொள்கிறார்கள்.
 மேலும் புதுக்கோட்டை நகராட்சி சாதாரண ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்ஷா மீது கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது நகராட்சியில் பகிரங்கமாக பேசப்பட்டு வருகிறது..

நகராட்சி ஆணையர், பொறுப்புள்ள அரசு அதிகாரி என்பதை மறந்து, ஆணையர்  ஜஹாங்கீர் பாட்ஷா சமீபத்தில்  அதிமுக 49ம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அண்ணாசிலை மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தொடங்குகிறது. அந்த நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்களுடன் முண்டிஅடித்துக்கொண்டு நின்றுக்கொண்டு இருக்கிறார்…அந்த புகைப்படங்களை பாருங்கள்.. புதுக்கோட்டை நகராட்சி மக்களாகிய நீங்களே இனி முடிவு செய்யுங்கள்..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *