Breaking News
Home / பிற செய்திகள் / நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…

நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில்- பலான விவகாரம்.. சிக்கிய கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன்…

அசிங்கம்..அசிங்கம்.. அலுவலத்திலேயே விபச்சாரமா என்று அலறியபடி  20.10.2020 மதியம் 3மணியளவில், நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன் அறையிலிருந்து ஒடி வந்தார் ஒரு அதிகாரி. நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகமே பரபரப்பானது. அரை நிர்வாண கோலத்தில் அய்யா, நந்துவுடன் என்று வார்த்தை முடிக்க முடியாமல் புலம்பினார். சில நிமிடங்களில் அசடு வழிந்தபடியே திருமாவளவன் அறையிலிருந்து நந்து வெளியே வந்தாள்..

  யார் நந்து..

 நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தை சுத்தம் செய்வதற்கு, கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கும்  15 சுகாதாரப்பணியாளர்கள் அவுட்சோர்சிங் மூலம்  நியமிக்கப்பட்டுள்ளார்கல். அதில் நந்தினியும் ஒருவர். நந்தினி கிளாமராக இருப்பதால், திருமாவளவன், புகழேந்தி இருவரும் நந்தினி வளையில் விழுந்துவிட்டார்கள். அவ்வளவுதான்…

  நந்தினியை கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன், தலைமைப் பொறியாளர் புகழேந்தி இருவரும் செல்லமாக நந்து என்று அழைப்பார்கள். திருமாவளவன், புகழேந்தி இருவர் அறைக்கு பொறுப்பாளர் நந்துதான்..

  கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன், தினமும் அரசு காரை அனுப்பி நந்துவை வீட்டிலிருந்து  அழைத்து வருவார். அலுவலகம் நேரம் முடிந்தது, நந்துவை  அரசாங்க காரில் சொகுசாக வீட்டுக்கு அனுப்பி வைப்பார். திருமாவளவன் தினமும் நந்துவுக்கு ரூ1000 கொடுத்துவிடுவார்.

 கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவனுக்கு, நிரந்தமாக அலுவலக ஊழியர் இருக்கிறார்கள். ஆனால் அந்த அலுவலக ஊழியர் ஒரங்கட்டப்பட்டுவிட்டார். நந்துதான் அலுவலக ஊழியர்.. திருமாவளவனை பார்க்க வரும் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி ஊழியர்களிடம் திருமாவளவன்  நந்துவை பார்த்துவிட்டு போங்கள் என்பார்..

 நந்துவுக்கு குறைந்தபட்சம்  ரூ500 கமிசன் கொடுக்கமால் செல்லும் அதிகாரிகள் கோப்பு முடக்கப்படும் அல்லது ஆமை வேகத்தில் மெதுவாக நகரும்.. தலைமைப் பொறியாளர் புகழேந்திக்கும் நந்து மீது தனி பாசம். புகழேந்தி அறைக்கு கோப்புகளை நந்துதான் கொண்டு செல்வார். அதனால் நந்து நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் அதிகாரமையத்தில் வலம்வந்தார்.

நகராட்சி நிர்வாக ஆணையருக்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்க்கு நந்து பற்றி டன் கணக்கில் புகார் வந்து கண்டு கொள்ளவில்லை.

 20.10.2020 அன்று கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன் அறையில் பலான கூத்து நடந்த நிகழ்ச்சி வெளிச்சத்துக்கு வந்து, நந்துவும் பணிக்கு வருகிறார்… திருமாவளவனும் வழக்கம் போல் அலுவலகத்து வருகிறார்.

 நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், நந்தினி செல்லமாக நந்துவை, இனி நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்துக்கு வரக் கூடாது என்று அவுர்சோர்சிங் எடுத்த ஒப்பந்ததாரரை அழைத்து உத்தரவிடவில்லை.

 கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவனுக்கு, தலைமைப் பொறியாளர் புகழேந்திக்கும் இனி ஜாலிதான்…

 இனி..என்ன.. நந்துவை பார்த்து, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் குட்மார்னிங் மேடம் என்று சொல்ல வேண்டிய  நிலை ஏற்படலாம்..

      நந்து வாழ்க.. நந்து புகழ் ஒங்குக என்ற கோஷம் ஒலிக்க தொடங்கிவிட்டது…

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *