Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா?…

சென்னை மாநகராட்சி… மகளிருக்கான E-Toliet எங்கே.. நிர்பயா நிதி ரூ9.57கோடி மோசடியா?…

மத்திய அரசின் நிர்பயா நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பணிகள் நடக்கவில்லை. 2016-17ல்  ERSS திட்டத்தில் ரூ965.58 இலட்சம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது, அதில் 42 மாதங்கள் கடந்தும், ரூ600இலட்சத்துக்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட சான்றிதழ் மத்தியச் அரசுக்கு அனுப்பி உள்ளது.

 மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியில் 1 முதல் 15 மண்டலத்திலும் பல்வேறு இடங்களில் 150 இருக்கைகள் கொண்ட மகளிருக்கான அதி நவீன கழிவறைகள் (E-Toliet) கட்ட சென்னை மாநகராட்சியில் 15.10.2019ல் தீர்மானம்(எண்.628) நிறைவேற்றப்பட்டு, நிதியும் ரூ9.57கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 மகளிருக்கான நவீன கழிவறைகள் அமைத்து, மூன்றாண்டுகளுக்கு ஒப்பந்ததாரால் பராமரிக்கவும், அனைத்து பணிகளுக்காவும் ரூ9.57கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் பணிகள் இன்று வரை தொடங்கவில்லை.

  மகளிருக்கான அதி நவீன கழிப்பறைகள் கட்ட ரூ9.57கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 12 மாதங்கள் ஆகியும், 1 முதல் 15 மண்டலத்தில் அதி நவீன கழிப்பறை கட்டப்படவில்லை.

 1-15 மண்டலத்தில் 150 இருக்கைகள் கொண்ட மகளிருக்கான அதி நவீன கழிவறைகளில், கட்ட ரூ9.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 12 மாதங்களான நிலையில் ஒரு இடத்தில் கூட கழிவறைகள் கட்ட முடியாத நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஊழல் மூழ்கி, சீரழிந்து போய்விட்டது என்பதுதான் உண்மை..

 மகளிர் பாதுகாப்புக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த, எந்த நிதியையும், தமிழ்நாடு அரசு முறையாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 மத்திய அரசின் நிர்பயா நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ9.57 கோடியில் மோசடி நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 அது சரி.. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், சென்னை மாநகராட்சி இணை ஆணையர்(சுகாதாரம்) மதுசூதனன் ரெட்டி ஐ.ஏ.எஸ், மேகநாதன்ரெட்டி ஐ.ஏ.எஸ் துணை ஆணையர் (பணிகள் பொறுப்பு) தலைமைப் பொறியாளர் நந்தகுமார்(ஆல் இன் ஆல் நந்தகுமார்) இவர்களுக்கெல்லாம் என்னதான் செய்கிறார்கள்…

 நிர்பயா நிதியில் நடந்த மோசடியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் அதிகாரிகளுக்கு மனசாட்சி இல்லையா?

கொள்ளையில் பங்கு மட்டுமா.. கொள்ளையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதா என்று வாக்களித்த மக்கள் கேட்கிறார்கள்.. பதில் சொல்லுவார்களா..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *