Breaking News
Home / பிற செய்திகள் / தமிழ்..தமிழ்..கோஷம் மட்டுமே.. கோப்புகளில் ஆங்கிலத்தில் கையெழுத்து போடும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- அமைச்சர் ஜெயக்குமார்..

தமிழ்..தமிழ்..கோஷம் மட்டுமே.. கோப்புகளில் ஆங்கிலத்தில் கையெழுத்து போடும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- அமைச்சர் ஜெயக்குமார்..

தமிழக அரசின் கோப்புகளில்  வட இந்தியாவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தமிழில் ஒவ்வொரு எழுத்தாக எழுதி கையெழுத்து போடுகிறார்கள். தலைமைச் செயலாளர் க.சண்முகம் என்று தமிழில் கையெழுத்து போடுகிறார்.

  ஆனால் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத்துறை செயலாளர்  டாக்டர் சொர்ணா ஐ.ஏ.எஸ் ஆகியோர் கோப்புகளில் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போடுகிறார்கள்..

 இது பழைய கோப்பு இல்லை.. அமைச்சர் ஜெயக்குமார் 17.7.2020ல், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 20.7.2020ல், சொர்ணா ஐ.ஏ.எஸ் 14.7.2020ல் தகவல் ஆணையர் நியமனம் தொடர்பான கோப்பில் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டு உள்ளார்கள்.

 மீண்டும் இன்னொரு கோப்பு  அதாவது தகவல் ஆணையர் தட்சணாமூர்த்தி தொடர்பான கோப்பிலும் 7.5.2020ல் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சொர்ணா ஐ.ஏ.எஸ் மூவரும் ஆங்கிலத்தில்தான்  கையெழுத்து போட்டு உள்ளார்கள்..

  அதிமுக அமைச்சர்கள்.. தமிழ்..தமிழ் என்று கோஷம் மட்டும் போடுகிறார்கள். ஆனால் பெரும்பலானா அமைச்சர்கள் கோப்புகளில் ஆங்கிலத்தில் தான் கையெழுத்து போடுகிறார்கள்..

  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, அமைச்சர் ஜெயக்குமார், சொர்ணா ஐ.ஏ.எஸ் இவர்களுக்கு  தமிழ் தெரியாதா.. தமிழில் கையெழுத்து போட விருப்பம் இல்லையா?

  தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியது போது, இனியாவது கோப்புகளில் தமிழில் கையெழுத்து போடுங்கள்..அய்யா…

Comments

comments

About mani bharathi

Check Also

பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி- பூங்கா திருடன் மாறனின்- மனசாட்சி பயோ-டேட்டா…

   பல்லவபுரம் நகராட்சியில் 05.11.2020ல் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி வெ.மாறன் மக்கள் செய்திமையம் எடுத்த அதிரடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *