
சென்னை துறைமுகம் மற்றும் எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் மண்டலம்-5, வார்டு 53,55&58 ஆகிய மூன்று வார்டுகளில் பழைய மழைய நீர் வடிகால்களை இடித்துவிட்டு, புதியதாக கட்டுவதற்கு ரூ14.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 5 எண்ணிக்கையிலான சிப்பங்களுக்கு மின்னணு முறையில் டெண்டர் கோரப்பட்டது.
ரூ14.98 கோடிக்கான மின்னணு முறையிலான டெண்டரில் 5 எண்ணிக்கையிலான சிப்பங்களுக்கும், தொழில் நுட்ப தகுதி பெற்ற ஐந்து நிறுவனங்கள் மட்டுமே விலைப்புள்ளிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொழில் நுட்ப டெண்டரில் எத்தனை பேர் கலந்துகொண்டாலும், விலைப்புள்ளி டெண்டரில் ஒவ்வொரு சிப்பங்களுக்கு குறைந்தது 2 நிறுவனங்கள் தகுதி இருந்தால் மட்டுமே, விலைப்புள்ளி டெண்டர் பிரிக்க முடியும்.
ஆனால் 5 எண்ணிக்கையிலான சிப்பங்களுக்கும் கீழ்க்கண்ட ஐந்து நிறுவனங்களும் மட்டும் விலைப்புள்ளி டெண்டரில் கலந்துக்கொண்டார்கள். ஐந்து நிறுவனங்களும் இறுதி செய்யப்பட்டது. இது டெண்டர் டிரான்பரன்சி சட்டத்துக்கு எதிரானது. ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்தது சட்ட விரோதமாகும்.
- அன்னை எர்த் மூவர்ஸ்(+17%)
- கேவிஎஸ் எண்டர்பிரைசஸ்(+18%)
- ஏ.அசோக்குமார்(+16%)
- எஸ்.வள்ளி(+16.50%)
- முரளி பவுண்டேசன்(+15%)
விலைப்புள்ளியில் ஐந்து நிறுவனங்கள் மட்டும் தேர்வான நிலையில் மறு டெண்டர் கோராமல், ஐந்து நிறுவனங்களின் விலைப்புள்ளி இறுதி செய்தார்கள்.
ஐந்து நிறுவனங்களும் +15% முதல் +18% வரை மதிப்பீட்டு தொகையை விட கூடுதலாக விலைப்புள்ளி டெண்டரில் குறிப்பிட்டு இருந்த காரணத்தால், விலை குறைப்பு தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தையில் ஐந்து நிறுவனங்களும் +2.99%, +2.98%, +2.99%, +2.98%, +2.97% விலைகுறைப்பு ஒப்புக்கொண்டார்களாம்..
விலைகுறைப்பு என்ற பெயரில் மெகா ஊழல் கூத்துதான் நடந்துள்ளது. விலைப்புள்ளி டெண்டரில் ஐந்து நிறுவனங்கள் மட்டும் தகுதி பெற்றிருந்தால், டெண்டரை ரத்து செய்து, மறு டெண்டர் கோரியிருக்க வேண்டும்.
அதை செய்யாமல் விலைகுறைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளை முதலில் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்..

தலைமை பொறியாளர் நந்தகுமார்(மழை நீர் கால்வாய் ஊழல் புகழ்), பின்னணியில் இந்த சட்ட விரோத டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் 25 சதவிகிதம் கமிசன் பெறப்பட்டு, பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி சட்டவிரோதமான டெண்டர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.. அப்படின்னா.. சட்ட விரோத டெண்டரில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யும் கூட்டணியா?
இந்த ரூ14.98 கோடி டெண்டர் ஊழல் தொடர்பாகவும், ஐந்து நிறுவனங்களையும் பிளாக் பட்டியலில் வைக்க வேண்டும் மற்றும் ஊழல் தொடர்புடைய தலைமைப் பொறியாளர் நந்தகுமார், ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு மக்கள்செய்திமையம் புகார் அனுப்பி உள்ளது.