
ஆவினில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆசியில் அருப்புக்கோட்டை சேதுபதி, பள்ளப்பட்டி ரமேஷ் உள்ளிட்ட சில சமூக விரோதிகளின் ஆதிக்கத்தில் சிக்கி தவிக்கிறது.

ஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான அருப்புக்கோட்டையை சேர்ந்த சேதுபதியை நிழல் அமைச்சர் என்றுதான் அழைக்கிறார்கள். ஆவினில் நடக்கும் அனைத்து சிவில் பணிகளை சட்டத்துக்கு புறம்பாக, டெண்டர் இல்லாமல் சேதுபதிதான் செய்கிறார்கள்.
நீ என்ன..அமைச்சரின் ஆள் என்றால் நானும் அமைச்சரின் ஆள் தான் என்று பள்ளப்பட்டி ரமேஷ், சில நாட்களுக்கு முன்பு நடந்த சிவில் டெண்டரில் ஒருவரும் டெண்டர் போடவிடாமல், ஆவின் அலுவலகத்தில் சேர் போட்டு உட்கார்ந்துக்கொண்டு போட்ட ஆட்டம், மிரட்டிய காட்சிகளை பார்த்து, சில நேர்மையான அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது.
அருப்புக்கோட்டை சேதுபதி, நான் தான் நிழல் அமைச்சர் என்று ஆவின் கட்டிடத்தில் 3 மாடியில் தங்கிக்கொண்டு, மதுவுடன் ஆட்டம் போடுகிறார்.
நான் தாண்டா அமைச்சரின் ஆள் என்று பள்ளப்பட்டி ரமேஷ் என்று ஆவினில் அலுவலகத்திலேயே ஆட்டம் போடுகிறார்..
ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் அடித்த கொள்ளையால், டாமின் மூடு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. டாமினிலிருந்து ஆவின் நிர்வாக இயக்குநராக வள்ளலார் ஐ.ஏ.எஸ்யை மாற்றிய போது டாமினில் தனக்கு மாமூல் வாங்கி கொடுத்த, 12 ஊழியர்களையும் ஆவினுக்கு அழைத்து வந்துவிட்டார்.
நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் மாமூல் கும்பல் 12 பேர்தான் ஆவின் நிர்வாகத்தை கவனிக்கிறார்கள்.. வள்ளலார் ஐ.ஏ.எஸ்யின் மாமூல் கும்பலின் ஆதரவு அருப்புக்கோட்டை சேதுபதிக்கும், பள்ளப்பட்டி ரமேஷ்க்கு இருப்பதால், இருவரின் ஊழல் ஆட்டம், அதிகாரதுஷ்பிரயோகம், எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.

செயலாளர் கோபால், சட்ட விரோதமாக பணியாற்றும் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ்யின் மாமூல் கும்பலை உடனடியாக வெளியேற்றும் படி பல முறை ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் கடிதம் அனுப்பிவிட்டார். ஆனால் கடிதம் கிடைத்தவுடன் சில நாட்கள் அந்த 12 பேர் காணமால் போய்விடுவார்கள். மீண்டும் சில நாட்களில் ஆதிக்கத்துக்கு வந்துவிடுவார்கள்..
அருப்புக்கோட்டை சேதுபதி, பள்ளப்பட்டி ரமேஷ் மற்று வள்ளலார் ஐ.ஏ.எஸ் மாமூல் கும்பல் 12 பேர் ஆக மொத்தம் 14 சமூக விரோதிகளின் ஆதிக்கத்தில் ஆவின் சிக்கி தவிக்கிறது.
இனி டாமின் போல், ஆவினில் ஊழியர்களுக்கு மாதா, மாதம் 15 நாட்கள் சம்பளம் தான் என்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது