Breaking News
Home / பிற செய்திகள் / திருவள்ளூர் மாவட்டம்… கொரோனா நெகடிவ் ரிசல்ட் மட்டும்.. முதல்வர் அரசி உத்தரவு… அதிவேகமாக பரவும் கொரோனா.. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மெளனம் ஏன்?

திருவள்ளூர் மாவட்டம்… கொரோனா நெகடிவ் ரிசல்ட் மட்டும்.. முதல்வர் அரசி உத்தரவு… அதிவேகமாக பரவும் கொரோனா.. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மெளனம் ஏன்?

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகாரித்துக்கொண்டே போகிறது.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து கொரோனா மாதிரிகள், ஒரு நாளைக்கு சராசரி 800 பெறப்படுகிறது. கொரோனா மாதிரி 800ல் 75 சதவிகிதம் அதாவது 600 மாதிரிகளுக்கு கொரோனா நெகடிவ் ரிசல்ட் கொடுக்க வேண்டும் என்று தனியார் ஆய்வு மையங்களுக்கு திருவள்ளூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  டீன் கம் முதல்வர்  டாக்டர் அரசி உத்தரவிட்டுள்ளார். இதனால் தனியார் ஆய்வு மையங்கள் தங்களுக்கு பணம் வந்தால் போதும் என்று உண்மையான பாசிடிவ் ரிசல்ட்டை மறைத்து  நெகடிவ் ரிசல்ட் கொடுத்து வருகிறார்கள்.

 இதனால் கொரோனா திருவள்ளூர் மாவட்டத்தில் அதிவேகமாக பரவி வருகிறது என்ற உண்மை மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்க்கு தெரிந்தும், நடவடிக்கை எடுக்கமால் இருப்பது ஏன்.. என்ற கேள்வி எழுந்துள்ளது.

   மேலும் திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யாமல், பிரசவ வார்டாக மாற்றிவிட்டார் டீன் டாக்டர் அரசி. பிரசவ வார்டில்(மகப்பேறு) பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டது. ஆனால் கொரோனா தொற்று உறுதியான ஊழியர்கள் வெளியே சொல்ல முடியாமல் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். இதனால் மகப்பேறு வார்டுகளில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது.

 மேலும் கொரோனா மாதிரிகளில் சென்னை பூந்தமல்லி ஹைரோடு, கீழ்ப்பாக்கத்தில்  உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் பாசிடிவ் ரிசல்ட் என்ற உண்மையான ஆய்வை  டீன் அரசிக்கு அனுப்பி இருக்கிறார்கள். நெகடிவ் ரிசல்ட் தான் கொடுக்க சொன்னேன் என்று கூறி, ஆர்த்தி ஸ்கேன் மையத்திற்கு சீல் வைத்துவிட்டார் டீன் அரசி…

  இனி ஆர்த்தி ஸ்கேன் மையம், கொரோனா மாதிரிகளை ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டுவிட்டது.

   திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா அதிவேகமாக பரவுவது மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்க்கு தெரியும். டீன் டாக்டர் அரசியுடன் கூட்டணி அமைத்து,  மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் செயல்படுவதால்  எதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே இருக்கிறார். மக்களைப்பற்றியும் கவலைபடவும் இல்லை.

  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்க்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதும், டாக்டர் அரசி நெகடிவ் ரிசல்ட் மட்டும் கொடுக்க வேண்டும் தனி ஆய்வு மையங்களை மிரட்டுவது  தெரியும். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு டாக்டர் அரசி மிகவும் வேண்டியவர் என்பதால் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிட்டார்.

  திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவுவதை, டாக்டர் அரசி, மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் இருவரும் இருக்கும் வரை கட்டுப்படுத்த முடியாது…

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *