
ஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான அருப்புக்கோட்டையை சேர்ந்த சேதுபதியை நிழல் அமைச்சர் என்றுதான் அழைக்கிறார்கள். ஆவினில் நடக்கும் அனைத்து சிவில் பணிகளை சட்டத்துக்கு புறம்பாக, டெண்டர் இல்லாமல் சேதுபதிதான் செய்கிறார்கள்.

சென்னை நந்தனம் ஆவின் வளாகத்தில் மூன்றாவது தளத்தில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்காக அதி நவின கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அந்த கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ள நிழல் அமைச்சர் சேதுபதி, தினமும் இரவில் 10 பேரை அழைத்து வந்து, பிராந்தி பார்ட்டி நடத்துகிறார். போதை அதிகமானது, சேதுபதியும், அவரது ஆட்களும் போடும் ஆட்டம், நந்தனம் அலுவலகமே அதிருது.. நந்தனம் மக்கள் அதிர்ச்சியுடன், ஆவின் அலுவலகத்தை நிமிர்ந்து பார்க்கிறார்கள்..
மேலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பெயரில் டெண்டர் இல்லாமல், தின வாடகைக்கு பால் ஏற்றி செல்லும் லாரிகளிடம் 15-20 சதவிகிதம் கமிசன் கேட்டு மிரட்டுகிறார் சேதுபதி..
ஆவின் அதிகாரிகளை அழைத்து, ஆட்சி முடியும் இன்னும் சில மாதங்களே உள்ளது, அமைச்சர் ரூ2கோடி வேண்டும் என்று கூறிவிட்டார், ரூ2கோடி வசூல் செய்து கொடுங்கள் என்று வெளிப்படையாக பேசி அதிகாரிகளை மிரட்டுகிறார் நிழல் அமைச்சர் சேதுபதி..
பால்கோவா, மைசூர்பாக், குலோஜான் உள்ளிட்ட இனிப்புகளை தயாரிக்கும் பணிகளை தனி நபர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இனிப்பு தயாரிக்கும் நபர்களிடம், நிறுவனங்களிடமும் மிரட்டி மாமூல் வசூல் செய்கிறார் நிழல் அமைச்சர் சேதுபதி…

ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ், தனக்கு மாமூல் வாங்கி கொடுக்க, டாமினிலிருந்து சிலரை அழைத்து வந்து வைத்துள்ளார்கள். வள்ளலார் ஐ.ஏ.எஸ்யின் மாமூல் நபர்கள், நிழல் அமைச்சர் சேதுபதியுடன் கூட்டணி அமைத்துவிட்டார்கள்.
சேதுபதியின் மாமூல் ஆட்டம், பிராந்தி தாண்டவம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது..
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம், நிழல் அமைச்சர் சேதுபதியை டன் கணக்கில் புகார் சொன்னாலும், கண்டுகொள்ளுவதில்லை..
ஊழல் செய்யும் ஆவின் அதிகாரிகள் நிழல் அமைச்சர் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து, ஊழல் சாம்ராஜ்ஜியம் நடத்துகிறார்கள்..
மக்கள்செய்திமையம் நிழல் அமைச்சர் சேதுபதியின் ஊழல் சாம்ராஜ்ஜியம் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார் அனுப்பி உள்ளது.