Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சியை இலஞ்சத்துக்கு நேந்துவிட்டாச்சா… உதவி செயற் பொறியாளர் அர்ச்சனா பின்னணியில்- அமைச்சர் பெஞ்சுமின்…

சென்னை மாநகராட்சியை இலஞ்சத்துக்கு நேந்துவிட்டாச்சா… உதவி செயற் பொறியாளர் அர்ச்சனா பின்னணியில்- அமைச்சர் பெஞ்சுமின்…

    சென்னை மாநகராட்சியில் எந்த பக்கம் திரும்பினாலும், ஊழல், இலஞ்சக் காற்றுதான் வீசுகிறது. செனை மாநகராட்சியை  இலஞ்சத்துக்கு நேந்துவிட்டாச்சு என்பது உறுதியாகிறது.

 சென்னை மாநகராட்சியின் மண்டலம் -11, வார்டு -147ல் உதவி பொறியாளராக அர்ச்சனா 2013ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அமைச்சர் பெஞ்சுமின் பின்னணியில் அர்ச்சனா இருப்பதால், உயர் அதிகாரிகளை மதிக்காமல் ஊழல் தாண்டவம் ஆடுகிறார்.

 சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளர் பதவியிலிருந்து உதவி செயற்பொறியாளர் பதவிக்கு  தலா ரூ5 இலட்சம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு  23 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

 இயந்திர பொறியியல் துறையில் உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு பெற்ற கே.எம்.அர்ச்சனா,  தலைமையிடத்தில் காலிப் பணியிடத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார்.  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில், அர்ச்சனா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வரும் போது பதவி உயர்வு கொடுக்க கூடாது. ஆனால் அமைச்சர் பெஞ்சுமின் சிபாரிசில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், விஜிலென்ஸ் கோப்புகளை பற்றி கவலைபடாமல் அர்ச்சனாவுக்கு  உதவி செயற் பொறியாளர் பதவி உயர்வு கொடுத்து ஊழல் சாதனை முதல் இடத்தை பிடித்தார்..

  அர்ச்சனா உதவி செயற்பொறியாளராக சென்னை மாநகராட்சியின் தலைமையிடத்தில் பணியில் சேரவில்லை. வழக்கம் போல் அமைச்சர் பெஞ்சுமின், பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யிடம்  தேர்தல் வருகிறது,  அர்ச்சனாவின் உதவி தேவைபடுகிறது. அதனால் அர்ச்சனாவை மண்டலம் -11, வார்டு -147ல் உதவி செயற்பொறியாளராக மாறுதல் செய்ய வேண்டும் என்று சிபாரிசு செய்தார்.

  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், அர்ச்சனாவை மண்டலம் -11, வார்டு -147க்கு உதவி செயற் பொறியாளராக மாறுதல் செய்ததோடு, உதவி பொறியாளர் பதவியையும் கூடுதல் பொறுப்பாக கொடுத்துள்ளார்..

  உதவி பொறியாளர் பதவியை கூடுதல் பொறுப்பாக கொடுக்கும் அளவுக்கு பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு என்னாச்சு என்று தெரியவில்லை..

 2013ம் ஆண்டிலிருந்து அர்ச்சனா மண்டலம் -11, வார்டு -147ல் தொடர்ந்து, சட்டத்துக்கு புறம்பாக, அமைச்சர் பெஞ்சுமின் ஆசியுடன் பணியாற்றி வருகிறார்.

 அர்ச்சனா தனக்கு கீழ் பணியாற்றும் சாலை பணியாளர் குபேந்திரன் பெயரில் ஹோண்டா சிட்டி TN 10 W 1539 கார் வாங்கி, அதில் பயணம் செய்கிறார். அந்த கார்தான் மாமூல் வசூலிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

   உதவி செயற் பொறியாளர் அர்ச்சனாவின் பின்னணியில் அமைச்சர் பெஞ்சுமின், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் இருவர் கூட்டணி இருப்பதை பார்க்கும் போது,       என்னமோ நடக்குது.. ஒண்ணுமோ புரியல்லை….

  மக்கள்செய்திமையம், அர்ச்சனா பதவி உயர்வு, மீண்டும் மண்டலம் 11, வார்டு -147க்கு மாறுதல் செய்தது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளித்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *