Breaking News
Home / பிற செய்திகள் / அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்- அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் ஆட்டம்… பத்மாவதியா… சுமித்தா…கிரிஸ்டல்யா… 5 ஸ்டாரா..

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்- அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் ஆட்டம்… பத்மாவதியா… சுமித்தா…கிரிஸ்டல்யா… 5 ஸ்டாரா..

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில்  Housekeeping/cleaning &security services பணிகளை மாஜி தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்(ஒய்வு) பினாமி நிறுவனமான பத்மாவதி Hospitality Facilities management services நிறுவனம் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி பணிகளை மேற்க்கொண்டது.

 2019ல் டெண்டரில் பத்மாவதிக்கு போட்டியா இன்னொரு நிறுவனம் எல்-1 ஆக வந்த காரணத்தால், அந்த டெண்டரில் முடிவு எடுக்காமல், அமைச்சர் விஜயபாஸ்கரின் உத்தரவின் படி கோப்பு முடக்கப்பட்டது.

 ஆனால் பத்மாவதியின் பினாமி நிறுவனமான சுமித் Outsourcing, கிரிஸ்டல் Outsourcing ஆகிய இரண்டு நிறுவனம் பெயரில் பத்மாவதியே அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணிகளை செய்து வருகிறது. பத்மாவதி நிறுவனத்தின் அதே சீருடை, பத்மாவதி என்ற பேட்ஜ் உடனே பணியாற்றி வருகிறார்கள்..

பத்மாவதி நிறுவனத்தின் பினாமி நிறுவனமான சுமித் Outsourcing, கிரிஸ்டல் Outsourcing இரண்டு நிறுவனங்களின் பெயரில் ஆண்டுக்கு ரூ200கோடிக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. ரூ200கோடியில் 30 சதவிகிதம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அதிகாரிகளுக்கு கமிசன்/இலஞ்சமாக கிடைத்தது.

மாஜி தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவும், அமைச்சர் விஜயபாஸ்கரும், கொரோனா காலத்தில் இரண்டு முறை சந்தித்து பேரம், பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேரம் சுமுகமாக முடிந்தது. அதனால் மீண்டும் டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டது.

 இந் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர்,  FIVE STAR என்ற பெயரில் புதிய தன்னுடைய  பினாமி நிறுவனத்துக்கு பணிகள் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

  FIVE STAR நிறுவனம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நர்ஸ், சுகாதாரபணியாளர்கள் உள்ளிட்ட பல பணிகளுக்கு ஆட்களை தற்காலிகமாக நியமித்துள்ளது.

  சுமித் Outsourcing, கிரிஸ்டல் Outsourcing, ,  FIVE STAR இந்த மூன்று நிறுவனத்துக்கு ஆதரவு தருவது என்று டீன், தலைமை டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் என்று தடுமாறி வருகிறார்கள்..

 திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி டீன் அரசி, மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் போடும் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.

  திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் எடுக்கப்படும் கொரோனா மாதிரிகளில் 75% நெகடிவ் என்று தான் கொடுக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டு செயல்படுத்தப்படுகிறது..

  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திருவள்ளூர் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த போது, நெகடிவ் ரிசல்ட் என்று காட்டி ஏமாற்றினார்கள்..

 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி டீன் அரசி, மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் இந்த நால்வர் அணியால் திருவள்ளூர் மாவட்டம் கொரோனாவால் சீரழிந்து வருகிறது..

  நேர்மையான அதிகாரி என்று வேஷம் போடும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் என்ன செய்ய போகிறார்… என்று பார்ப்போம்…

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *