
2021 சட்டமன்றத் தேர்தலுக்காக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அப்ரூவல்களில் அதிகார பகிர்வு என்ற பெயரில் இலஞ்சம் வாங்க அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சரும் இணைந்து திருப்தி சென்று வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து வந்ததை தொடர்ந்து, வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சித்துறை செயலாளர் ராஜேஷ் லகானி ஐ.ஏ.எஸ் 13.10.2020 அன்று வெளியான அரசாணை எண்.154ஐ படித்தாலே இலஞ்சத்தை ஊக்குவிக்கும் அரசாணையாகதான் பார்க்க முடியும்.

சென்னை மாநகராட்சியை தவிர தமிழகம் முழுவதும் நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி, நிர்வாகமே அப்ரூவல் கொடுப்பதில் அதிகார பகிர்வு என்ற பெயரில் இலஞ்ச பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது.
1. 10,000 சதுர அடி, 8வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, 36 அடி உயரத்துக்கு மேல் போகாமல் Stilt + 3 floor அல்லது Ground +2 floors கட்டிட அனுமதியை நகராட்சி, பேரூராட்சி நிர்வாகமே அளிக்க அதிகார பகிர்வு அதாவது இலஞ்ச பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது.
2. வணிக வளாகங்கள் கட்டுமான பணிக்கு சென்னை பெரு நகர வளர்ச்சி பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 300 சதுர மீட்டர், 36 அடி உயரம் மிகாமல் அப்ரூவல் வழங்கலாம்.
மற்ற மாவட்டங்களில் வணிக வளாகங்கள் கட்டுமான பணிக்கு Stilt + 2 floor அல்லது Ground +1 floorக்கு உள்ளாட்சி அமைப்புகளே அப்ரூவல் வழங்கலாம் என்று அரசாணை 154ல் அதிகார பகிர்வு என்ற பெயரில் இலஞ்ச பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது..
2021ல் சட்டமன்றத் தேர்தலுக்காக, உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சிகள், பேரூராட்சிகளில் ஆளும் கட்சியான அதிமுகவினருக்கு மாமூல் கொடுக்க, அதிகார பகிர்வு என்ற பெயரில் இலஞ்ச பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இனி நகராட்சிகளின் ஆணையர்கள், நகரமைப்பு அதிகாரிகள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் அப்ரூவல் கொடுத்து, இலஞ்ச பண மழையில் குளிப்பார்கள்.. இந்த இலஞ்ச பண மழையில் அதிமுகவினரும் பங்கு கிடைக்கும்..
அதிகார பகிர்வா… இலஞ்ச பகிர்வா.. ராஜேஷ்லகானி ஐ.ஏ.எஸ் தான் பதில் சொல்ல வேண்டும்.
வருது..வருது.. தேர்தல் வருது.. வாங்கு.. வாங்கு..இலஞ்சம் வாங்கு…