
உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் ஊழலில் சிக்கி சீரழிந்து போச்சு என்பதை மக்கள்செய்திமையம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி ஊழல் சிக்கி மூழ்கிவிட்டது. கண்ணாடி இழை கேபிள் பதிப்புக்கு அனுமதி கொடுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம், தட வாடகை வசூலில் ஊழல் நடந்துள்ளது.

1. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை கேபிள் பதிப்புகளுக்கு தட வாடகை வசூல் செய்யாமல், 15 நிறுவனங்களுக்கு கண்ணாடி இழை கேபிள் பதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Dish net wireless ltd
Gemini T.V
Kal cable pvt ltd
Hutchi son Essar Cellar lts,
Aircel ltd
TATA
VSNL
Reliance infocom ltd
Royal cable vision pvt ltd
Vodefone Essar cellular ltd
Bharati Airtel ltd
BSNL,
Idea cellular ltd
Naveen Brand Band service
Reliance Jio infocom
இந்த 15 நிறுவனங்களிடமிருந்து தட வாடகை வசூல் செய்யாத காரணத்தால் மாநகராட்சிக்கு இழப்பு ரூ3,08,96,489(ரூ3.08கோடி). ஆனால் ரூ3.08கோடியில் அதிகாரிகள் இலஞ்சமாக ஒரு கோடி வாங்கிவிட்டதாக இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் புலம்புகிறார்கள்..
2. VIdesh Sanchar Nigam ltd தொலை தொடர்பு நிறுவனம் 28.1.2008 முதல் TCL நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது.
VSNL –TCL நிறுவனம் 173.90கிமீ தூரத்திற்கு கண்ணாடி இழை கேபிள் பதித்துள்ளது. ஆனால் அந்த நிறுவனத்திடம் தட வாடகை ரூ1,16,23,450/-(ரூ1.16கோடி) வசூல் செய்யவில்லை. இதில் மதுரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கமிசன் எவ்வளவு என்று தெரியவில்லை.
இதே பாணியில் BSNL நிறுவனம் கண்ணாடி இழை கேபிள் பதிப்பு பணியை L&T நிறுவனம் மூலம் மேற்க்கொண்டது. தட வாடகை வசூல் செய்யப்படவில்லை. இதனால் மாநகராட்சிக்கு இழப்பு ரூ10 இலட்சம்..
இப்படி கண்ணாடி இழை பதிப்பில் தட வாடகை வசூல் செய்யாத காரணத்தால் கோடிக்கணக்கில் மதுரை மாநகராட்சிக்கு இழப்பு. ஆனால் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தட வாடகையை இலஞ்சமாக வசூல் செய்து, தங்கள் பாக்கெட்டை நிரப்பிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை.