
உள்ளாட்சி அமைப்புகள் எப்படி சீரழிந்து போய் கிடக்கிறது என்பதை வாக்களித்த அப்பாவி மக்களின் கவனத்துக்கு கொண்டு போக முடிவு செய்து, மக்கள்செய்திமையம் செய்திகளை சேகரித்து வெளியிட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் பதவி காலியாக உள்ளது. நகராட்சி பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் ஆணையர் பொறுப்பிலும் இருக்கிறார். செங்கல்பட்டு நகராட்சி விற்பனைக்கு போர்டு மட்டும் இன்னும் போடவில்லை.. அவ்வளவுதான்..
செங்கல்பட்டு நகராட்சி வளாகத்தில் அரசு வாகனங்களின் நிலையை பாருங்கள்..
நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ், இப்போது ஆணையராக இருக்கும் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் காற்று கூட செங்கல்பட்டு நகராட்சி பக்கம் அடித்திருக்க வாய்ப்பு இல்லை. அரசு சொத்தைப்பற்றி கவலைபடாத, மனசாட்சி இல்லாத அதிகாரிகளின் நிர்வாகத்தில் எப்படி தமிழ்நாடு வளர்ச்சி அடையும்..



கோடிக்கணக்கான மதிப்புள்ள குடி நீர் லாரிகள், புல்டவுசர், டிராக்டர்கள், பேட்டரி கார்கள் உள்ளிட்ட பல கனரக வாகனங்கள் அவல நிலையை போட்டோ மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.