Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி- மண்டலம் -11 வளசரவாக்கம்- கட்டிட அனுமதியில்- கோடிக்கணக்கில் கோல்மால்.. பின்னணியில் அமைச்சர் பெஞ்சுமின்…

சென்னை மாநகராட்சி- மண்டலம் -11 வளசரவாக்கம்- கட்டிட அனுமதியில்- கோடிக்கணக்கில் கோல்மால்.. பின்னணியில் அமைச்சர் பெஞ்சுமின்…

சென்னை மாநகராட்சியில் 2015-16ம் ஆண்டு முதல் 2019-2020ம் ஆண்டு வரை சுமார் ரூ1000கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.

 சென்னை மாநகராட்சியின் மண்டலம் -11 வளசரவாக்கத்தில் சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி கொடுக்கப்பட்ட  கட்டிட அனுமதியால் கோடிக்கணக்கில் கோல்மால் நடந்துள்ளது.

 2017-18ல் சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்ட கட்டிட அனுமதி கோல்மால்..

1. திட்ட அனுமதி எண். PPA/WDCN11/00016/2017 நாள் 11.4.2017 என்.ரவி பிளாட் எண்.3, மீனாட்சிநகர், முதல் மெயின் ரோடு, போரூர், சென்னை -116. 3.1.2017ல் அனுமதி வழங்கும் பொருட்டு திறந்தவெளி கட்டணமாக ரூ9.83இலட்சம் வசூலிக்க கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் உதவி செயற் பொறியளர் தணிகை வேலன், செயற்பொறியாளர் பானுகுமார் இருவரும்  நிலத்தின் பிரிக்கப்படாத பரப்பரளவினை சரிப்பார்க்கும் எந்தவித ஆதாரமும் இன்றி திறந்தவெளி கட்டண கணக்கிடப்பட்ட ரூ9.83 இலட்சத்தில் ரூ9.68 இலட்சம் தள்ளுபடி செய்து, ரூ15,000 மட்டும் வசூல் செய்துள்ளார்கள். ரூ9.68 இலட்சம் இலஞ்சமாக பெறப்பட்டது என்பது உண்மை.

2. திட்ட அனுமதி எண்.PPA/WDCN11/03602/2017 & 03603/2017 & 00052/2017 ஏ.ஆர் டில்லிபாபு கனேஷ் நகர்  முதல் தெரு, மதுரவாயல், சென்னை-95  செயற் பொறியாளர் திருமுருகன், உதவி செயற் பொறியாளர் ஜெயக்குமார்சிங் இருவரும் சட்ட விதிகளின் படி வழங்கபட்ட அதிகார வரம்பை மீறி வணிகவளாகத்துக்கு திட்ட அனுமதி கொடுத்துள்ளார்கள்.

3. திட்ட அனுமதி எண்.PPA/WDCN11/04657/2017  உக்கிரபாண்டியன், வரலட்சுமி நகர், மதுரவாயல், சென்னை-95  சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தின் திட்ட அனுமதியை கணக்கீட்டு ரூ5,06,000 கணக்கிடப்பட்டு, ரூ6000 மட்டும் வசூல் செய்யப்பட்டது. ரூ5 இலட்சத்தை தள்ளுபடி செய்தார்கள் செயற் பொறியாளர்  திருமுருகன், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார்சிங்..

4. திட்ட அனுமதி எண்.PPA/WDLN11/08045/2017 நாள் 12.01.2018 குழந்த கனி மற்றும் சிலர், ஆற்காடு ரோடு, ஆழ்வார் திருநர், சென்னை-87.. 470 சதுர மீட்டர் வணிக வளாக கட்டிட அனுமதியின் போது அடிப்படை கட்டமைப்பு நிதி செயற் பொறியாளர் பானுகுமார், உதவி செயற்பொறியாளர் விஜயபாஸ்கர் வசூல் செய்யவில்லை.  அதே போல் பி.செல்வராஜ்  ஆற்காடு சாலை, வளசரவாக்கம், சென்னை -87.. சாலை வெட்டு கட்டணம்  வசூலிக்கப்படவில்லை.

    இதில் விடுபட்ட தொகை ரூ2.12 இலட்சம் கமிசனாக பெறப்பட்டுள்ளது..

  5.  செயற்பொறியாளர் பானுகுமார், உதவி செயற்பொறியாளர் விஜயபாஸ்கர் இருவரும் எம்.ஆர்.ரவி, பழனியப்பா நகர், வளசரவாக்கம், சென்னை -87.. 555 சதுர மீட்டரில் 215 சதுர மீட்டர் குடியிருப்பு பயன்பாடு எனவும், 340 சதுர மீட்டர் மட்டும் வணிக பயன்பாடு என்று பிரித்து, சட்டத்துக்கு புறம்பாக அனுமதி அளித்துள்ளார்கள்.

 இப்படி 2017-18ல் வளசரவாக்கம் மண்டலத்தில் கட்டிட அனுமதி வழங்கப்பட்டத்தில் கோடிக்கணக்கில் கோல்மால் நடந்துள்ளது.

  வளசரவாக்கம் மண்டலத்தில் கோடிக்கணக்கில் நடந்த கோல்மால்களை உள்ளாட்சி நிதித் தணிக்கை அறிக்கையும் உறுதி செய்துள்ளது.

கோல்மால் அதிகாரிகளின் பின்னணியில் அமைச்சர் பெஞ்சுமினும்,  தலைமைப் பொறியாளர் நந்தகுமாரும் இருப்பதால் , கோல்மாலில் தொடர்புடைய அதிகாரிகள் மீது இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *