Breaking News
Home / பிற செய்திகள் / தூத்துக்குடி.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு… குப்பைகளை அகற்றிய 2400 பெண்கள்… இலட்சக்கணக்கில் ஆடம்பர செலவு…

தூத்துக்குடி.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு… குப்பைகளை அகற்றிய 2400 பெண்கள்… இலட்சக்கணக்கில் ஆடம்பர செலவு…

தூத்துக்குடியில் கொரோனா ஆய்வு கூட்டம், நலத்திட்ட உதவிகள்,  28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாமகளிர் சுய உதவிக்குழுக்களுடன் ஆலோசனை இப்படி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்திலிருந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு காரில் வரும் போது, குப்பைகள் பறந்து காரில் மோதிவிடக் கூடாது என்பதற்காக  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்  பணியாற்றும் 2400 பெண்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டது.

 விமான நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை அதிமுக கொடிக் கம்பம் இல்லாத காரணத்தால் பனை மரத்தில் அதிமுக கொடி பறக்கவிடப்பட்டது.

  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடக்கும் அரங்குக்கு லிப்ட்டில் வருகிறார். ஆனால் நடைபாதை முழுவதும் மேட் விரிக்கப்பட்டுள்ளது.

  ஏற்கனவே பல லட்சம் செலவில் குளு,குளு வசதி மற்றும் சுழலும் பேன் வசதியுடன் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்கள், முதல்வரின் பாதுகாப்புக்காக வெட்டப்பட்டுவிட்டது.

  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யாவில் சில மணி ஆய்வுக் கூட்டத்துக்கு பல லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

    வாக்களித்த அப்பாவி மக்கள் தான் 2021 சட்டமன்றத் தேர்தலில், இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்..

Comments

comments

About mani bharathi

Check Also

அதிமுக அரசின்- கால்நடை தொட்டியில்- ரூ26கோடி ஊழல்..

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி கால்நடைகளுக்கு பயன்படும் வகையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *