Breaking News
Home / பிற செய்திகள் / மாமல்லபுரம் பேரூராட்சி.. சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்யால்- முடக்கப்பட்ட வளம் மீட்பு பூங்கா.. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதால் மூடிவிட முடிவு…

மாமல்லபுரம் பேரூராட்சி.. சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்யால்- முடக்கப்பட்ட வளம் மீட்பு பூங்கா.. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதால் மூடிவிட முடிவு…

 மாமல்லபுரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வளம் மீட்பு பூங்கா, பேரூராட்சிகளின் இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ்யின் ஊழல், நிர்வாக திறமையின்மையால் முடக்கப்பட்டுவிட்டது.

உண்மையில் ஆய்வு செய்த போது, 2008-2009ல் திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் சுனாமி  அவசரகால நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ66.30 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டு 9.12.2009ல் திறக்கப்பட்டது. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்பதால், அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டு , மூடிவிட இயக்குநர் சு.பழனிசாமி ஐ.ஏ.எஸ் முடிவு செய்துள்ளார்.

 அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு, முடக்கப்பட்டு வருகிறது.  பல கோடி திட்டங்கள் முடக்கப்பட்டு, மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புலம்புகிறார்கள்.

 ஆனால் கோப்புகளில் மட்டும் 11.6.2020 வரை இயற்கை உரம் 2512 கிலோவும், மண் புழு உரம் 260கிலோவும் உள்ளது. இதை வைத்துக்கொண்டு  மாதா, மாதம் பராமரிப்பு பெயரில் பல ஆயிரம் போலி பில் போடப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது.

  திடக்கழிவு மேலாண்மை திட்டம் வளம் மீட்பு பூங்காவின் அவல நிலையை போட்டோக்கள் மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உள்ளோம்..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *