Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா..அதிமுக அரசின் – முகக் கவசம் கொள்முதலில் ரூ200கோடி ஊழல்… நவம்பரில் புத்தகமாக வெளியிட முடிவு…

கொரோனா..அதிமுக அரசின் – முகக் கவசம் கொள்முதலில் ரூ200கோடி ஊழல்… நவம்பரில் புத்தகமாக வெளியிட முடிவு…

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த 3 லேயர் முகக் கவசம், என்.95 முகக்கவசம், தனி நபர் பாதுகாப்பு உடைகள்(பிபிஇ கிட்) கொள்முதலில் ரூ200கோடிக்கு ஊழல் நடந்ததுள்ளது.  இதற்கான ஆதாரங்களை மக்கள்செய்திமையம், துறை வாரியாக பெற்றுள்ளது.

 முகக் கவசம் கொள்முதல் விலை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிட மேலாண்மை ஆணையரகம்/ மேலாண்மைத்துறை வெளியிட்ட அரசாணையில் உள்ள விலைக்கும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின்  முகக்கவசம் நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலைக்கு ஏகப்பட்ட குளறுபடிகள்..

 உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில்  ரூ5 விலையுள்ள 3 லேயர் முகக்கவசங்களை ரூ15 முதல் ரூ20க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

1. ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் முகக்கவசம் 13.48கோடி கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் ரேசன் கார்டுகளுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்படும் முகக்கவசம் அணிய முடியாத நிலையில் கோவணத்துண்டு மாதிரி உள்ளது. இதற்காக ரூ28கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 2. மீண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தால் ரூ60கோடிக்கு 3 லேயர் முகக் கவசம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

 3. அரசுத் தேர்வுகள் இயக்ககம், சமூக நலத்துறை மூலம்  46.37 இலட்சம் முகக் க்வசம் கொள்முதல் முதல் செய்யப்பட்டது. இந்த முகக் கவசங்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை.

4. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் மூலம்  கொள்முதல் செய்யப்பட்ட  முகக்கவசங்களில் 8.8.2020 வரை  3 லேயர் முகக் கவசம் 70.53 இலட்சம், என்.95 முகக் கவசம் 10.20 இலட்சம், பிபி இ கிட் 10.22 இலட்சம்  தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் மட்டும் ஸ்டாக் உள்ளது.

5. உள்ளாட்சி அமைப்புகளில் முகக் கவசம் கொள்முதல் செய்யப்படாமலேயே, கொள்முதல் செய்யப்பட்டது போல் கோடிக்கணக்கில் பில் போடப்பட்டுள்ளது.

6.386 ஊராட்சி ஒன்றியங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு  ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும்  முதல் கட்டமாக  தலா 30,000 முகக் கவசம் என 1.15கோடி முகக் கவசங்கள்  கொள்முதல் செய்யப்பட்டது போல்  போலி பில் போடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாகவும் போலி பில் போடப்பட்டுள்ளது.

  இப்படி முகக் கவசம் கொள்முதலில் ரூ200கோடி வரை மெகா ஊழல் நடந்துள்ளது.  முகக் கவசத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன்படி ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களின் பேரில்  மக்கள் செய்திமையம் முகக் கவசம் கொள்முதலில் ரூ200கோடி ஊழல்  புத்தகம்  நவம்பர் மாதம்   வெளியிட முடிவு செய்துள்ளது.

 8.8.2020 வரை RT PCR Kit 15,45,700(15.45இலட்சம்) ரூ312.62கோடிக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் கொள்முதல் செய்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *