Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி – மண்டலம் -5. உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் அலுவலகமா..சமூக விரோதிகளின் கூடராமா?- குப்பை குவியலில் ஜெயராமன் அலுவலகம்..

சென்னை மாநகராட்சி – மண்டலம் -5. உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் அலுவலகமா..சமூக விரோதிகளின் கூடராமா?- குப்பை குவியலில் ஜெயராமன் அலுவலகம்..

சென்னை மாநகராட்சியில்  பண புழக்கம் அதிகமுள்ள மார்வாடிகள் அதிகம் வாழும் செளகார்ப்பேட்டை முழுவதும் மண்டலம் -5ல் வருவதால்  உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன்,  செயற்பொறியாளர் லாரன்ஸ் ஆகிய அதிகாரிகளின் காட்டில் 24மணி நேரமும், 365 நாளும் பண மழைதான்..

 மண்டலம் -5 உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் அலுவலகம் சமூக விரோதிகளின் கூடராமாக மாறிவிட்டது.   உதவி செயற் பொறியாளர் ஜெயராமன் அலுவலகத்தில் ஒரு அறையில் சிலர் சீட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

 உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் எந்த பக்கம் திரும்பினாலும், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அலுவலகத்தில் பல அறைகள் திறந்தே கிடக்கிறது. உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறதா என்ற கேள்விதான் எழுந்துள்ளது..

 உதவி செயற்பொறியாளர் அலுவலகம் பக்கம் நடந்து போனலே, டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா வந்துவிடும்..

  செயற் பொறியாளர் லாரன்ஸ்க்கு மாமூல் சரியாக வந்துவிடுவதால், ஜெயராமனை கண்டு கொள்வதில்லை.

 இன்னும் சில நாட்களில் சென்னை மாநகராட்சியின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை  உதவி செயற்பொறியாளர்  ஜெயராமன் விலை பேசி விற்பனை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 ஆனால் வாக்களித்த அப்பாவி மக்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல், கழிவு நீருடன் வாழ்ந்துக்கொண்டு இருப்பதுதான் கொடுமையிலும்..கொடுமை..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *