Breaking News
Home / பிற செய்திகள் / திருவேற்காடு நகராட்சி.. விஜிலென்ஸ் அதிகாரிகள் – பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யை விலைக்கு வாங்கிவிட்டேன்.. ராஜேந்திரனின் ஊழல் ஆட்டம்…

திருவேற்காடு நகராட்சி.. விஜிலென்ஸ் அதிகாரிகள் – பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யை விலைக்கு வாங்கிவிட்டேன்.. ராஜேந்திரனின் ஊழல் ஆட்டம்…

திருவேற்காடு நகராட்சியில் விஜிலென்ஸ் அதிகாரிகள் நடத்திய அதிரடி ரெய்டில் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதாவும் சிக்கினார்கள்.ராஜேந்திரன், கவிதா இருவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜிலென்ஸ் வழக்கு பதிவு செய்து உள்ளது.

 ஆனால் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதா இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்யாமல், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் காப்பாற்றிவிட்டார்.   விஜிலென்ஸில் சிக்கிய ராஜேந்திரன் கோவில்பட்டி  நகராட்சிக்கும், கவிதா அரக்கோணம் நகராட்சிக்கும் மாற்றப்பட்டுள்ளார்கள்.

 விஜிலென்ஸில் சிக்கிய நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நான் விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் ஆகியோரை விலைக்கு வாங்கிவிட்டேன். அதனால் நான் தற்காலிக நீக்கம் செய்யப்படாமல், என் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு மாறுதல் பெற்றுவிட்டேன். இனி என்னை ஒண்ணும் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்..

 ஆனால் உண்மையில் ராஜேந்திரனுக்கு சொந்த ஊர் பரமக்குடி. முதலில் பணியாற்றிய இடம் தூத்துக்குடி. சிவகாசி நகராட்சி ஆணையராக மோகன் பணியாற்றிய போது, சிவகாசியில் ராஜேந்திரன் நகரமைப்பு ஆய்வாளராக இருந்தார்.

 அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமியிடம் உதவியாளராக இருந்த கார்த்திக்கிடம் இலஞ்சம் கொடுத்து, ஆணையர் மோகன் தான், ராஜேந்திரனுக்கு தாம்பரம் நகராட்சிக்கு மாறுதல் வாங்கி கொடுத்தார்.

 அதனால் தான் மோகன் ஒய்வு பெற்றப்பிறகும், ராஜேந்திரனுக்கு விசுவாசமாக செயல்படுகிறார். இப்போதும், ஒய்வு பெற்ற RDMA  மோகன் மூலம்தான்  அதிகாரிகளை விலைக்கு வாங்கியுள்ளதாக, ராஜேந்திரனே, செல்போன் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து வருகிறார்.

  ஒய்வு பெற்ற RDMA  மோகன், மீண்டும் புரோக்கராக ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு நகராட்சி, பூந்தமல்லி நகராட்சிகளில் வலம் வருவதுதான் வேடிக்கையாக உள்ளது.. கொரோனாவால் கட்டுமான தொழில் முடங்கி போனதால் ஒய்வு பெற்ற RDMA  மோகன் மீண்டும் புரோக்கராக மாறிவிட்டாராம்..

  ராஜேந்திரன் கோவில்பட்டிக்கு சென்றாலும் மீண்டும் விஜிலென்ஸில் சிக்க போவது உறுதிதான்..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *