Breaking News
Home / பிற செய்திகள் / ஊழலில் மூழ்கிய தூத்துக்குடி மாநகராட்சி.. கடை வாடகை 10கோப்புகள் எங்கே?- கல்வி நிதியில் முறைகேடு… பேருந்து நுழைவு கட்டண ஊழல்..

ஊழலில் மூழ்கிய தூத்துக்குடி மாநகராட்சி.. கடை வாடகை 10கோப்புகள் எங்கே?- கல்வி நிதியில் முறைகேடு… பேருந்து நுழைவு கட்டண ஊழல்..

தூத்துக்குடி மாநகராட்சியின் 2015-16,206-17,207-18 ஆகிய மூன்றாண்டுகளின் உள்ளாட்சி  நிதித் தணிக்கை அறிக்கையின் நகலை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெற்றோம். உள்ளாட்சி நிதித் தணிக்கையின் எந்த பக்கம் திருப்பினாலும், ஊழல், முறைகேடு, இழப்பு தான்…

  1. கடை வாடகை 10 கோப்புகள் எங்கே…

தூத்துக்குடி மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் தெற்கு காட்டன் ரோடு மற்றும் பாளையங்கோட்டை ரோடு ஆகிய இடங்கலில் வணிக வளாக கடை உரிமங்கள் தொடர்பாக

அ16/2906/91, அ16/29483/92, அ16/10716/94, அ16/7162/99, அ16/8826/99, அ16/18511/99, அ16/27596/99, அ16/2057/2000, அ16/25606/2000, அ16/26181/2000 ஆகிய 10 கோப்புகள் காணவில்லை. இது தொடர்பான விசாரணையில் அ16 இருக்கையில் பணியாற்றிய எஸ். குருமூர்த்தி மற்றும் ஜி.ஞானசேகர் மீது குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு  ஒரு கோடிக்கு மேல் இழப்பு.. சி.பி.சி.ஐ.டி விசாரணை என்றார்கள். ஆனால் ஒண்ணுமே நடக்கவில்லை.  இன்று வரை காணாமல் போன கோப்புகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  • பேருந்து நுழைவு கட்டணம் ஊழல்..

2017-18ம் ஆண்டில் புதிய பேருந்து நிலையம்  மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் நுழைவுக் கட்டணம் வசூல் உரிமமானது, குத்தகைக்கு விடாமல், துறை மூலமாக வசூல் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.அ16/20353/12கோப்பின் படி புதிய பேருந்து நிலைய பேருந்துகள் நுழைவு கட்டண வசூல் குத்தகை பிரபாகரனுக்கு ரூ72,50,000(ரூ72.50இலட்சம்), பழைய பேருந்து நிலைய பேருந்துகள் நுழைவு கட்டண வசூல் குத்தகை ஆபிரகாமுக்கு ரூ3,50,000  என ரூ76இலட்சத்துக்கு கொடுக்கப்பட்டது.

  ஆனால் குத்தகைக்குவிடாமல், மாநகராட்சி ஊழியர்கள் வசூலே செய்யவில்லை.  இரண்டு பேருந்து நிலைய பேருந்துகள் நுழைவு கட்டணம் என்ற பெயரில் மாநகராட்சி ஊழியர்கள் வசூல் செய்த தொகை ரூ13,01,908(ரூ13.01இலட்சம்) . இதில் வசூல் செய்த ஊழியர்களுக்கு சம்பளம் ரூ1,80,000 என ரூ2,60,000 மற்றும் இதர படிகள் ரூ60,000 என ரூ3,20,000 கொடுக்கப்பட்டது.  மாநகராட்சிக்கு கிடைத்த வருவாய் ரூ10 இலட்சம்தான்.. இப்படி சத்தமில்லாமல் ரூ63இலட்சத்துக்கு ஊழல் நடந்துள்ளது..

  • கல்வி நிதியில் முறைகேடு…

தமிழ்நாடு ஆரம்பக் கல்வி சட்டம் 1920ன்படி மாநகராட்சியில் கல்வி வரி, சொத்து வரியில் 2.50% வசூலிக்கப்பட்டு, மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் கட்டுதல், மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு செலவிடப்படும். கல்வி நிதி ஐ.ஒ.பி 18325 வங்கி கணக்கில் ரூ466.47 இலட்சம்(ரூ4.66கோடி) செலவிடபடாமல் உள்ளது.

 ஆனால் 004/16.9.17 பாண்டுரங்கன் தெரு பள்ளிக்கட்டிடம், 011/19.12.17ல் சாமுவேல்புரம் பள்ளி கட்டிடம், 014/28.12.17 சிவந்தகுளம் பள்ளி கழிப்பிடம் ஆகியவைகளுக்கு செலவு செய்ததாக ரூ32,80,602(ரூ32.80இலட்சம்) கூறப்பட்டுள்ளது. ஆனால் தணிக்கையின் போது அளவு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அதனால் ரூ32.80 இலட்சம் செலவு செய்யப்பட்டதா என்ற உள்ளாட்சி நிதித்தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

  இப்படி தூத்துக்குடி மாநகராட்சியில் ஊழல் சிக்கி மூழ்கிவிட்டது. இனி வாக்கு அளித்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

   தூத்துக்குடி மாநகராட்சியின் ரூ100கோடி ஊழல் தொடர்பாக விரைவில் புத்தகம் வெளியிட மக்கள் செய்திமையம் முடிவு செய்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *