Breaking News
Home / பிற செய்திகள் / சீரழிந்து போகும்- நகராட்சி நிர்வாக ஆணையரக அலுவலகம்..

சீரழிந்து போகும்- நகராட்சி நிர்வாக ஆணையரக அலுவலகம்..

நகராட்சி நிர்வாக ஆணையரக அலுவலகம் ரூ100கோடி செலவில் அதிநவீனமுறையில் கட்டப்பட்டது. ஆனால் ரூ100கோடி கட்டிடம் கட்டி முடிந்து ஒராண்டு வரை திறக்கப்படவில்லை.

  ரூ100கோடி கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளாத காரணத்தால், கட்டிடத்தின் கதவுகள், தாழ்பாள்கள்,  கழிப்பறைகள் சீரழிந்து வருகிறது.

  நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் தினமும் பார்த்துக்கொண்டே செல்லும், அறை கதவின் நிலையை பாருங்கள்..இப்படி பெரும்பாலான கதவுகளின் நிலை உள்ளது.

 மேலும் பல கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்தால், மழை நீர் அலுவலகத்தின் வளாகத்தில் தேங்கி நிற்கிறது.

பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன், தலைமைப் பொறியாளர் புகழேந்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் மட்டும் அதி நவீன முறையில் பராமரிக்கப்படுகிறது.

   ரூ100கோடி கட்டிடத்தை இனியும் பராமரிப்பு பணி செய்யவில்லை என்றால், இடிந்து விழுந்து, செங்கல், சிமெண்ட் கலவை மட்டும்தான் காணமுடியும்..

Comments

comments

About mani bharathi

Check Also

அதிமுக அரசின்- கால்நடை தொட்டியில்- ரூ26கோடி ஊழல்..

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி கால்நடைகளுக்கு பயன்படும் வகையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *