Breaking News
Home / பிற செய்திகள் / திருத்தணி நகராட்சி.. பாலசுப்ரமணியன் அண்ணாச்சியின்- ஊழல் கூத்து…

திருத்தணி நகராட்சி.. பாலசுப்ரமணியன் அண்ணாச்சியின்- ஊழல் கூத்து…

திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன், ஊழல் செய்வதில்  கில்லாடி என்பதை நிருபித்துள்ளார்.  ஆழ்துளை கிணற்றை வாடகைக்கு எடுக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..அண்ணாச்சியின் ஊழல் கூத்தை…

 ஊழல் கூத்து-1.

 திருத்தணி நகராட்சியில் 27.03.2020ல் நடந்த சாதாரண கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஊழல் தீர்மானங்கள்..

 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, அரசு மற்றும் தனியார் சுவர்களில் உள்ள அரசியல் சார்ந்த விளம்பரங்களை அழிக்க, ரூ1,28,106/-(ரூ1.28இலட்சம்) 12 மாதங்கள் கழித்து 2020 மார்ச் மாதம் பணம் பட்டுவாடா செய்து உள்ளார்…12 மாதங்கள் கழித்து போலி பில் போட்டால், யாருக்கும் தெரியாது என்று நினைத்துவிட்டார்..

 உள்ளாட்சி நிதித்தணிக்கை அறிக்கையில் எந்த ஆண்டு ரூ1.28 இலட்சத்துக்கு கணக்கு காட்டுவார்..ரூ1.28 இலட்சம் போலி பில் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்..

ஊழல் கூத்து -2..

 22.11.2019 அன்று மாண்புமிகு அமைச்சர், மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு நடமாடும் கழிப்பறைகள் அமைக்க ரூ26,550… சிரிப்பாக இருக்கா.. என்ன செய்வது..

 ஊழல் கூத்து -3…

 காலி இடங்களில் உள்ள கருவேல் மரங்கள், முட்செடிகளை, தனியார் கே.சி.பி இயந்திரம் மூலம் அகற்ற வாடகை ரூ2,99,936….நமக்கு தெரிந்து திருத்தணியில் மழைநீர் வடிகால்கால்வாய்களில் எங்கே இருக்கிறது.. திருத்தணி முருக கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்…

4. ஆழ்துளை கிணறுகள் வாடகை ஊழல்..

   திருத்தணியில் குடி நீர் பஞ்சமாம், ஆழ்துளை கிணறுகளில்  நீர் வற்றிவிட்டதால், ஆழ்துளை கிணறுகளை மாத வாடகைக்கு எடுக்கப்பட்டதாக ஏப்ரல் மாதம் வாடகை மட்டும் ரூ4.50 இலட்சமாம்..

 அருங்குளம் கிருஷ்ணன், அருங்குளம் ஆறுமுகம், அருங்குளம் பரந்தாமன் மூவரிடமும் ஆழ்துளை கிணறு வாடகைக்கு எடுக்கப்பட்டதாம்… ஒரு ஆழ்துளை கிணறுக்கு வாடகை ஒரு மாதத்துக்கு ரூ30,000/- மூன்று பேரிடமும் எத்தனை ஆழ்துளை கிணறு இருக்கிறது, என்று தெரியவில்லை. ஆனால் ரூ4.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. அம்மாடியோவ்.. கொள்ளையோ..கொள்ளை..

  இதை விட வேடிக்கையான ஊழல்… திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளுக்கு 102 துப்பரவு பணியாளர்களை அனுப்பும் Sarm enviro pvt ltd நிறுவனத்தின் டெண்டர் 31.07.2020யுடன் முடிவடைவதால், 30.06.2020 ஒப்பந்தம் கோரமுடியவில்லை. அதனால் அடுத்த ஒப்பந்தபுள்ளி கோரும் வரை Sarm enviro pvt ltd ஒப்பந்தம் நீட்டிக்கப்படுகிறது.

 பாலசுப்ரமணியன் அண்ணாச்சி.. ஒப்பந்தம் நீட்டிக்க காலம் வேண்டுமா?  பிறகு எப்போது ஒப்பந்தபுள்ளி கோருவது எப்போது..

  இப்படி திருத்தணி நகராட்சியில்  போலிபில் மூலம்  கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. மக்கள் செய்திமையம் சில  உதாரணங்களை மட்டுமே இங்கு வெளியிட்டுள்ளது.  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பி உள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *