Breaking News
Home / பிற செய்திகள் / பெட்டிக்கடை போல- ஊருக்கு ஊர் –வீதிக்கு வீதி- பார்மசி கல்லூரிக்கு அனுமதி.. அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் சாதனை…

பெட்டிக்கடை போல- ஊருக்கு ஊர் –வீதிக்கு வீதி- பார்மசி கல்லூரிக்கு அனுமதி.. அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல் சாதனை…

அதிமுக ஆட்சி என்றாலே ஊழல் ஆட்சி என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயாஸ்கர் உறுதி செய்துள்ளார். 1991-96 அதிமுக ஆட்சியில் பெட்டிக்கடை போல், ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பிறகு அனைத்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் மூட விழா நடத்தப்பட்டது, தனி சோக கதை..

அதே பாணியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் இருவர் கூட்டணி, தமிழகம் முழுவதும் ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி பெட்டிக்கடை போல், டி.பார்ம், எம்.பார்ம், பி.எஸ்.சி நர்சிங், என பார்மசி, நர்சிங் கல்லூரிகளுக்கு கொரோனா காலத்திலும் அனுமதி அளித்து, மெகா ஊழல் சாதனையை அரங்கேற்றியுள்ளார்கள்.

 ஒரு கல்லூரி அனுமதிக்கு(டிரஸ்ட் பெயரில்) ரூ25 இலட்சம் – ரூ50 இலட்சம் வரை இலஞ்சம் பெறப்பட்டு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.. பெட்டிக்கடை போல் அனுமதி கொடுக்கப்பட்ட பார்மசி கல்லூரி பட்டியல்…

  1. மதர் தெர்சா நர்சிங் கல்லூரி, இலுப்பூர், புதுக்கோட்டை(அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமானது.
  2. காமராசர் பார்மசி கல்லூரி கீரைப்பாளையம், சிதம்பரம் கடலூர்,
  3. இலண்டன் நர்சிங் கல்லூரி , கச்சராபாளையம் ரோடு, கள்ளக்குறிச்சி
  4. AAB School of DMLT வந்தவாசி,  திருவண்ணாமலை.
  5. ஸ்ரீ ஜசக் நியூட்டர் பார்மசி கல்லூரி பாப்பாகோயில் கிராமம் நாகப்பட்டினம்
  6. ஆர்.கே.பி பார்மசி கல்லூரி, பெரியகோட்டப்பள்ளி, கிருஷ்ணகிரி
  7. காவேரி நர்சிங் கல்லூரி, எம்.கலிப்பட்டி, மேச்சேரி, சேலம்
  8. ஸ்ரீ கிருஷ்ணா பார்மசி கல்லூரி, பக்கிரிபாளையம், செங்கம், திருவண்ணாமலை
  9. செயிண்ட் மாரியம்  பார்மசி கல்லூரி , சிவலார்குளம் கிராமம் ஆலங்குளம், நெல்லை.
  10. யூனிடெட் பார்மசி கல்லூரி , கூடலூர் பேரூராட்சி பெரியநாயக்கன் பாளையம் கோவை.
  11. பாரத் நர்சிங் கல்லூரி,  அகரம் கிராமம்,சேலையூர், சென்னை
  12. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரி, கே.மேட்டுபாளையம், கோபி, ஈரோடு.
  13. டாக்டர் சகுந்தலா நர்சிங் கல்லூரி,  முருங்கபேட்டை, முத்தரசநல்லூர், ஸ்ரீரங்கம், திருச்சி.
  14. சன் பார்மசி கல்லூரி,  நீண்டங்கரை கிராமம், அகஸ்தீஸ்வரம், நாகர்கோயில், கன்னியாகுமரி
  15. ஆத்தி நர்சிங் கல்லூரி காக்காதோப்பு, குடியாத்தம்.
  16. கற்பகம் பார்மசி கல்லூரி, ஒத்தக்கால்மண்டபம், மதுக்கரை, கோவை
  17. பி.பி.ஜி பார்மசி கல்லூரி,சரவணம்பட்டி, கோவை
  18. மேயர் ராதாகிருஷ்ணன் பார்மசி கல்லூரி, தேவனாம்பட்டினம், கடலூர்
  19. சாரா நர்சிங் கல்லூரி, மணக்கடவு, தாராபுரம், திருப்பூர்

நமக்கு கிடைத்த வகையில் 19 பார்மசி கல்லூரி, நர்சிங் கல்லூரிகள் டிரஸ்ட் பெயரில் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் 35 பார்மசி, நர்சிங் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாம்..

பி.பார்ம் மட்டும் அனுமதிக்கு ரூ25-ரூ35 இலட்சம், பி.பார்ம், எம்.பார்ம் இரண்டுக்கு அனுமதி பெற ரூ50 இலட்சம் என இலஞ்ச பட்டியலே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா காலத்திலும் பார்மசி கல்லூரி, நர்சிங் கல்லூரிக்கு அனுமதி கொடுத்து, கோடிக்கணக்கில் இலஞ்சம் பெறப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  இது தொடர்பாக  மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார் அளித்துள்ளது.

  கொரோகா காலத்திலும், பார்மசி கல்லூரி, நர்சிங் கல்லூரிக்கு அனுமதி கொடுத்து, ஊழல் சாதனை செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு என்ன விருது கொடுக்கலாம் என்று புதுக்கோட்டை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *