Breaking News
Home / பிற செய்திகள் / தமிழக அரசு கோப்புகளில்- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்- ஆங்கிலத்தில் கையெழுத்து… அமைச்சருக்கு தமிழ் தெரியுமா?…

தமிழக அரசு கோப்புகளில்- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்- ஆங்கிலத்தில் கையெழுத்து… அமைச்சருக்கு தமிழ் தெரியுமா?…

தமிழக அரசு கோப்புகளில் வட மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்  தமிழில் கையெழுத்து போடுவதில்லை என்று மக்கள்செய்திமையம் செய்தி வெளியிட்டது. இதில் வட மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் குறிப்புக்கோப்புகளில் தமிழில்தான் கையெழுத்து போடுகிறோம் என்று நமக்கு விளக்கம் அளித்தார்கள்.

 ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமஅய்யா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இருவரும் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போடுகிறார்கள் என்ற உண்மையை நம்மிடம் சொன்னார்கள்.

 துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தமிழில்தான் கையெழுத்து போடுவார். அதே போல் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் தமிழில் க.சண்முகம் அல்லது க.ச என்று கையெழுத்து போடுவார் என்ற தகவல் நமக்கு கிடைத்தது.

 இதை உறுதிப்படுத்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையிலிருந்து மத்திய அரசிடமிருந்து கொரோனாவுக்காக பெறப்பட்ட நிதி ரூ1360கோடி.. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காவல்துறையிலிருந்து பெறப்பட்ட ரூ8.50கோடியை திருப்பி அனுப்ப, முதல்வர் உத்தரவிட்டதால், ரூ8.50கோடி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ8.50கோடி கழிக்கப்பட்டது தொடர்பான குறிப்புக்கோப்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாலர் அதுல்யமிஸ்ரா ஐ.ஏ.எஸ் தமிழில் கையெழுத்து போட்டு உள்ளார். நிதித்துறை செயாளர் எல்.கிருஷ்ணன் தமிழிலும், தலைமைச் செயலாளர் க.சண்முகம்  என்று தமிழிலும் கையெழுத்து போட்டு உள்ளார்கள்..

  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டு உள்ளார். துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தமிழில் கையெழுத்து போட்டு உள்ளார்.

 முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அய்யா அவர்கள், கே.பழனிச்சாமி என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக கையெழுத்து போட்டு உள்ளார்.

  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எப்போதும் ஆங்கிலத்தான் கையெழுத்து போடுவாராம்.. ஒரு வேளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு  தமிழ் தெரியாதோ…

 மாண்புமிகு முதல்வர் அய்யாவுக்கு என்னாச்சு…

 இப்படி ஆங்கிலத்தில் கையெழுத்து போடும் அமைச்சர்களை, அதிமுக அமைச்சரவையில் வைத்துக்கொண்டு தமிழை பற்றி பேசிக்கொண்டு இருந்தால் என்ன நியாயம் என்று தெரியவில்லை..                                                                             …தொடரும்…

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *