Breaking News
Home / பிற செய்திகள் / போக்குவரத்து ஆணையர்.. ஜவஹர் ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில்- 23.9.2020 அன்று நள்ளிரவில்- கோடிக்கணக்கில் இலஞ்சம்..

போக்குவரத்து ஆணையர்.. ஜவஹர் ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில்- 23.9.2020 அன்று நள்ளிரவில்- கோடிக்கணக்கில் இலஞ்சம்..

சென்னை எழிலகத்தில் போக்குவரத்து ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ் அலுவலகத்தில் 23.09.2020 அன்று  இரவு 10 மணி முதல் அதிகாலை 3.30மணி வரை 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் பண கட்டுடன் குவிந்தார்கள்.. 5.30மணி நேரத்தில் கோடிக்கணக்கில் வசூலாம்.. என்ன நடந்தது…

தமிழகம் முழுவதும் இயங்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உதவியாளராக 350க்கும் அதிகமானவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளராக 137 பேருக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. 23.9.2020 அன்று போக்குவரத்துதுறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள எழிலகத்தில் போக்குவரத்து ஆணையர் ஜவகர் ஐ.ஏ.எஸ், போக்குவரத்து இணை கமிஷனர் நிர்வாகம் பொன் செந்தில்நாதன், விழுப்புரம் போக்குவரத்து துணை கமிஷனர் சுரேஷ் குமார் ஆகியோர் அலுவலகம் முடிந்த பிறகும் நள்ளிரவில் அலுவலகத்திற்கு வந்து வளாகத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமிராக்களை ஆப் செய்துவிட்டு பதவி உயர்வு பெறும் உதவியாளர்கள் மற்றும் தகுதியில்லாத உதவியாளர்களை நேரடி அழைத்து நள்ளிரவில் பேரம் பேசினார்கள்.

  இரவு 11மணியளவில்  ஆணையர் ஜவஹர் ஐ.ஏ.எஸ், புறப்பட்டு போய்விட்டார் என்று நள்ளிரவில் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்த நேர்மையான ஊழியர்கள் சிலர் நம்மிடம் புலம்பினார்கள்..

   இரவில் நடக்கும் பேரம் விவகாரம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகள் அங்குள்ள கேமிராவை  ஆப் செய்து விட்டு அதிகாலை 3.30 மணி வரையில் கூட்டம் நடத்தினார்கள்.

 நள்ளிரவு கூட்டத்தில்  பதவி உயர்வு அளிக்க ஒருவருக்கு ரூ.3 முதல் ரூ.4 லட்சம்  வரையில் பேரம் நடந்து, இலஞ்சம் வசூல் செய்யப்பட்டது.  இரவு 11மணி முதல் விடியற்காலை 3மணி வரை100க்கு மேற்பட்ட உதவியாளர்கள் பண கட்டுடன் குவிந்தார்கள். சாக்குமூட்டைகளில் பணம் குவிக்கப்பட்டு, நள்ளிரவே அப்புறப்படுத்தப்பட்டது.

 எழிலகத்தின் மற்ற பகுதியில்  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தாலே, போக்குவரத்து ஆணையர் அலுவலகம் நள்ளிரவில் செயல்பட்டது உறுதியாகும்.

 போக்குவரத்து துறையில் பணியாற்றும் உதவியாளர் பதவியிலிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வு விலைக்கு விற்கப்பட்டால், பிறகு போக்குவரத்துத்துறையில் இலஞ்சத்தை எப்படி ஒழிக்க முடியும்..

  நேர்மையான முறையில் அளிக்க வேண்டிய பதவி உயர்வை 23.9.2020 அன்று நள்ளிரவில் விலைக்கு விற்றதுதான் வேதனையாக உள்ளது..

 23.9.2020 அன்று இலஞ்சம் கொடுத்தவர்கள், கண்காணிப்பாளர் பதவி உயர்வு அரசாணைக்காக காத்திருக்கிறார்கள்..

 ஆளும் கட்சியில் அதிகாரமையத்தில் வலம் வரும் அரசியல்வாதிகளைவிட, இலஞ்சம் வாங்குவதில் அதிகாரிகளின் ஊழல் சாதனை செய்கிறார்கள்.. இனி தமிழ்நாட்டை ஊழல் சாம்ராஜ்ஜியத்திலிருந்து காப்பாற்றவே முடியாது..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *