Breaking News
Home / பிற செய்திகள் / பேரூராட்சிகளின் இயக்குநரகம்.. 22.5.2020ல் ஊழல் சூதாட்டம்.. ஊழல் சக்கரவர்த்தி பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்- வை..ராஜா..வை.. ரூ5 இலட்சம் வைத்தால் ரூ1கோடி வை…ராஜா..வை…

பேரூராட்சிகளின் இயக்குநரகம்.. 22.5.2020ல் ஊழல் சூதாட்டம்.. ஊழல் சக்கரவர்த்தி பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்- வை..ராஜா..வை.. ரூ5 இலட்சம் வைத்தால் ரூ1கோடி வை…ராஜா..வை…

கிராமபுறங்களில் உள்ள சினிமா தியேட்டர்களின் வெளியில்  கெரசின் காடா விளக்கில்..வை..ராஜா..வை.. ஹாட்டினில் ரூ5 வைத்தால் ரூ10, பிளவரில் ரூ10வைத்தால் ரூ50 கிடைக்கும் என சூதாட்டம் நடக்கும்..

 அதே பாணியில் 22.5.2020 அன்று பேரூராட்சிகளின் இயக்குநர் அலுவலகத்தில் வை..ராஜா.வை சூதாட்டத்தில் நடந்த ஊழல் சூதாட்டத்தை பாருங்கள்..இது ரூ5 சூதாட்டம் இல்லை. ரூ5 இலட்சம் சூதாட்டத்தில் செலுத்தினால் ஒராண்டில் ரூ1 கோடி சம்பாதிக்கலாம்.. வை..ராஜா..வை..

  1. ந.க.எண்.1165/2018-1/அ1 நாள் 22.5.2020 தேர்வுநிலை செயல் அலுவலர் நிலையில் பதவி உயர்வு அளிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இப்பணியிடத்தில் இரண்டாண்டு ஊட்டுப்பணிக்காலம் முடிக்கப் பெறாதது தொடர்பாக தமிழ்நாடு பேரூராட்சி சார்நிலைப் பணி சிறப்பு விதிகளில் விதி-3ஐ தளர்வு செய்து, சிறப்பு நிலை செயல் அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

சிறப்பு நிலை செயல் அலுவலகராக பதவி உயர்வு 15.2.2019லிருந்து அளிக்கப்பட்டுள்ளது. திருமதி லதா மாமல்லபுரம் பேரூராட்சியில் தொடங்கி( வை…ராஜா..வை சூதாட்டத்தில் ரூ10 இலட்சம் – அதனால் கூடுதல் பொறுப்பாக உத்தரமேரூர் பேரூராட்சி)டி.ஆர். சுஷ்மா களக்காடு பேரூராட்சி வரை அவர்கள் பணியாற்றிய பேரூராட்சிகளில் சிறப்பு  நிலை செயல் அலுவலராக 19 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

  • ந.க.எண்.1165/2018-2/அ7 நாள் 22.5.2020.. வை..ராஜா..வை சூதாட்டத்தில்  முதல் நிலை செயல் அலுவலர்  பதவி உயர்வு அளிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இப்பணியிடத்தில் இரண்டாண்டு ஊட்டுப்பணிக்காலம் முடிக்கப் பெறாதது தொடர்பாக தமிழ்நாடு தேர்வு நிலை செயல் அலுவலர் பதவி உயர்வு… சந்திரசேகரன் – கூகலூர், சத்தியமூர்த்தி புஞ்சைபுகளூர் பேரூராட்சி, திருமதி ஜி.உஷா சிவகரி பேரூராட்சி,, திருமதி ஹேமலதா  ஆப்பக்கூடல் பேரூராட்சி நான்கு பேருக்கும் 3.2.2018லிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • ந.க.எண்.10755/2019/அ1 நாள் 27.06.2020ல் சிறப்பு நிலை செயல் அலுவலர் பதவி உயர்வு எஸ்.மோகன்ரங்கன், சத்தியமூர்த்தி, தனபால், முகம்மது சிஸ்வான், கோ.ராமலிங்கம், திருமதி ஜி.உஷா, வீரபாண்டியன் ஆகிய ஏழு பேருக்கு 2019லிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  •   22.5.2020ல் புஞ்சைபுகளூர் பேரூராட்சி சத்தியமூர்த்தி,  சிவகரி பேரூராட்சி ஜி.உஷா இருவருக்கும் தேர்வு நிலை செயல் அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் 27.5.2020ல் இருவருக்கும் சிறப்பு நிலை செயல் அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.. வை..ராஜா..வை சூதாட்டத்தில் அதிக விலை கொடுத்திருப்பார்களோ..என்னவோ…

ப்படி கொரோனா காலத்திலும் பதவி உயர்வு ஊழல் சூதாட்டம் நடத்திய பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்க்கு ஊழல் சக்கரவர்த்தி பட்டம் வழங்க, தமிழக அரசுக்கு மக்கள்செய்திமையம் பரிந்துரை செய்கிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி… பிரகாஷ் ஐ.ஏ.எயின் துக்ளக் நிர்வாகம்.. செயற்பொறியாளர் பானுகுமாரின்- அதிகாரமையத்தின் அட்டகாசம்..

சென்னை மாநகராட்சி மண்டலம் -11ல் 4.11.2020 மாலை 4.30மணிக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் செயற்பொறியாளர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *