Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி- ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பாஜகவில்… பாஜக சங்கத்தின் நிழல் தலைவர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்…

சென்னை மாநகராட்சி- ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பாஜகவில்… பாஜக சங்கத்தின் நிழல் தலைவர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்…

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் விரைவில் பாஜகவில் சேர முடிவு செய்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் லஞ்ச அறையில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பற்றி பரப்பரப்பாக பேசி வருகிறார்கள்..

அண்ணாமலை ஐ.பி.எஸ் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்து டெல்லி ஆசியுடன் தமிழகத்தில் அதிகார மையத்தில் வலம் வருகிறார். அதே பாணியில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யும் பாஜகவில் சேர முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.

  பாஜகவின் தலைவர் முருகன் தினமும் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யுடன் பேசி வருகிறார். 7.9.2020 அன்று செங்கொடி சங்கத்தை சேர்ந்த துப்பரவு பணியாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் செய்த காரணத்தால் துப்பரவு பணியாளர்கள் 750 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள்.

 செங்கொடி சங்கத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்ட 750 பேரில் 11 துப்பரவு தொழிலாளர்கள் பாஜக சங்கத்தில் சேர்ந்துவிட்டார்கள். அதனால் 11 பேருக்கு பணி கொடுக்க வேண்டும் என்று பாஜக சங்கத்தின் பொது செயலாளர் புருஷோத்தமன், எழும்பூர் பிரசாத் தலைமையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சந்தித்து(முகக் கவசம் அணியாமல்) பேசி, மனு கொடுத்தார்கள்.

 பாஜக சங்கத்தினர் கொடுத்த மனுவில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், இணை ஆணையருக்கு (சுகாதாரம்) உடனடியாக பணி தரும்படி சிபாரிசி செய்தார். 11 பேருக்கு பணி கொடுக்கப்பட்டதால், பாஜக சங்கத்தில் சேர்ந்தால் மீண்டும் பணி என்று ஏலம் போட்டார்கள். சுகாதாரப்பணியாளர் 70, 80 பேர் சேர்ந்ததாக கூறி, பிரகாஷ் ஐ.ஏ.எஸ்  பரிந்துரையால் மீண்டும் பணி வழங்கப்பட்டது.

 இதில் என்ன வேடிக்கை என்றால் பாஜக சங்கத்தை தொடங்க ஆலோசனை சொன்னதே பிரகாஷ் ஐ.ஏ.எஸ் தான்..

 பாஜக சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் புருஷோத்தமன் கடந்த 15ஆண்டுகளில் ஒட்டுநர் பணி செய்யாமல், எஸ்.வி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் தொழில் செய்து வந்தார். அதனால் 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் புருஷோத்தமன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

 பிப்ரவரியில் பாஜக சங்கம் தொடங்கினார்.. பாஜக தலைவர் முருகன் பரிந்துரையின் பேரில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் புருஷோத்தமனுக்கு மீண்டும் பணி வழங்கி உத்தரவிட்டார். மே 2020ல் ஒய்வு பெற வேண்டிய புருஷோத்தமன், ஒய்வு பெறும் வயது ஒராண்டு நீட்டிக்கப்பட்டதால், தொடர்ந்து பணியில் இருக்கிறார்…

 பாஜக தலைவர் முருகன், எதை சொன்னாலும் உடனடியாக செய்து கொடுத்துவிடுகிறார் பிரகாஷ் ஐ.ஏ.எஸ். தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கு பாஜக சங்கம் கொடுக்கும் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரகாஷ் ஐ.ஏ.எஸ் உத்தரவே போட்டுள்ளார்.சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பாஜக சங்கத்தின் நிழல் தலைவர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யா என கிண்டலாக பேசுகிறார்கள்..

  அண்ணாமலை தன்னை மதிக்காத காரணத்தால்  பாஜக தலைவர் முருகன், அண்ணாமலைக்கு எதிராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ்யை களம் இறக்க முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *