
பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி இறந்து போனால், அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி ரூ25 இலட்சமா, ரூ50 இலட்சமா.. என குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது..
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் வெளியான அரசாணை எண்.403/05.08.2020ல் சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, பி.டி.ஒ, நர்ஸ், பேரூராட்சி செயல் அலுவலர், சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என 28 பேருக்கு தலா ரூ25 இலட்சம் என ஒதுக்கீடு செய்யப்பட்டு, வாரிசுதாரர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வெளியான அறிவிப்பில் உள்ள அரசாணையில் ரூ5 இலட்சம் முதல் ரூ50 இலட்சம் வரை நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது.
- ஒசூர் போக்குவரத்து காவல் தலைமைக் காவலர் சேட்டு, குடும்பத்துக்கு(அரசாணை எண்.608/8.5.2020) நிவாரண நிதியாக ரூ50 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
- திருச்சி கிராம நிர்வாக அலுவலர் குமார், குடும்பத்துக்கு(அரசாணை எண்.217/21.5.2020) நிவாரண நிதியாக ரூ50 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை போக்குவரத்து காவலர் அருண் காந்தி, குடும்பத்துக்கு(அரசாணை எண்.575/21.4.2020) ரூ10 இலட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
- ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நர்ஸ் ஜான்மேரி பிரிசில்லா, குடும்பத்துக்கு(அரசாணை எண்.535/5.6.2020) ரூ5 இலட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் வெளியான அரசாணை எண்.403ல் 28 பேர் குடும்பத்துக்கும் தலா ரூ25இலட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக…
- சென்னை மாநகர காவல்துறையின் மாம்பலம் ஆய்வாளர் பாலமுரளி
- சென்னை மாநகர காவல்துறையின் பட்டினம்பாக்கம் எஸ்.ஐ மணிமாறன்
- பாலுசெட்டி சத்திரம் எஸ்.ஐ. பழனி
- ஸ்ரீபெரும்புதூர் கிராம நிர்வாக அதிகாரி ராஜாராம்..
- கும்முடிபூண்டி பிடிஒ சுவாமிநாதன்
- செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் சுகுமாரன்.
- சென்னை மாநகராட்சி மலேரியா பணியாளர்
- சென்னை மாநகராட்சி உதவி மருத்துவ அதகாரி ஆறுமுகம்
- ஆவடி மாநகராட்சியின் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர்
- திருநெல்வேலி மாநகரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாது சிதம்பரம்
- சந்திரலிங்கம் சேல்ஸ் மேன் பொது விநியோகம்..
இப்படி 28 பேருக்கு ரூ25 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் என்ன வேதனை செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி தீன் டாக்டர் சுகுமாரனுக்கும் ரூ25இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது..
ஆனால் டாக்டர்கள் பணியில் இருக்கும் போது இறந்து போனால் ரூ50 இலட்சம் கொடுப்போம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார் அது என்னாச்சு என்று தெரியவில்லை..
நாம் விசாரித்த வகையில் சென்னை பெரு நகர காவல்துறை ஆணையர், டி.ஜி.பி, பெரு நகர சென்னை மாநகரட்சி ஆணையர் இப்படி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிபாரிசு செய்தால் ரூ50இலட்சம் நிவாரணம் கொடுக்கப்படுமாம்..
என்ன அநியாயம்..என்ன வேதனை.. இதற்கு பிறகும் அதிமுக அரசை அரசு ஊழியர்கள் நம்ப வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..