Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி… URBASER SA – SUMEET FACILITIES LTD… நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அதிகாரிகள்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் – நந்தகுமார் –மகேசன் – வீரப்பன்…

சென்னை மாநகராட்சி… URBASER SA – SUMEET FACILITIES LTD… நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட அதிகாரிகள்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் – நந்தகுமார் –மகேசன் – வீரப்பன்…

      சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், டெப்போக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களை URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்திடம் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்  வாடகை க்கு  விற்று விட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி இடம் மட்டுமல்ல பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர்(திடக்கழிவு மேலாண்மை) மகேசன், கண்காணிப்பு பொறியாளர்(திடக்கழிவு மேலாண்மை) வீரப்பன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை  URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் விலைக்கு வாங்கிவிட்டது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. Bold…

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணி(திடக்கழிவு மேலாண்மை) ஸ்பெயின், இந்தியா கூட்டு நிறுவனமான URBASER SA  and SUMEET FACILITIES LTD PUNE என்ற நிறுவனத்திடம்  டெண்டர் டிரான்பரன்சி விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக,ரூ447கோடிக்கு (மண்டலம் 11,12,14,&15க்கு குப்பைகளை அகற்ற ரூ172.50கோடி(Package –II) & மண்டலம் 9,10,&13(Package –V) குப்பைகளை அகற்றரூ274.50 கோடி) ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் 3000 பேட்டரி வாகனங்களை போதிய இட வசதியை  இல்லாமல்  கொள்முதல் செய்து குவித்துள்ளது.

மந்தைவெளியில் மாநகராட்சியில் லாரி டெப்போவிலிருந்து தினமும் 50க்கு மேற்பட்ட குப்பை லாரிகள், குடி தண்ணீர் லாரிகள், கழிவு நீர் அகற்றும் லாரிகள் 24மணி நேரமும் வந்து போகும்..

 50க்கு லாரிகளை சாலைகளில்  நிறுத்திவிட்டு, URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்தின் பேட்டரி வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..

 மேலும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பேட்டரி வாகனங்கள், குப்பைகளை கொட்டி வைக்கும், குப்பை தொட்டி என அனைத்து சுகாதார உபகரணங்களையும் குவித்துள்ளது.

 சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு கேள்விகள்..

  1. URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் எழு மண்டலங்களில் ரூ447கோடிக்கு குப்பைகளை அகற்ற டெண்டர் எடுத்துள்ளது. பேட்டரி வாகனம், குப்பை தொட்டிகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் உபகரணங்களை வைக்க, இடமில்லாமல் எப்படி அந்த நிறுவனம் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
  2. URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்திடம்,  சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் போடும் போது, சென்னை மாநகராட்சி இடங்களை அடகு வைத்துவிட்டீர்களா?

       ரூ447 கோடி டெண்டரில் 20 சதவிகித கமிசன் என்றால் ரூ90கோடி கமிசனுக்கு சென்னை மாநகராட்சி விலைக்கு விற்கப்பட்டுவிட்டதா?

 சென்னை மாநகராட்சியை விலைக்கு விற்ற பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர் மகேசன், கண்காணிப்புப் பொறியாளர் வீரப்பன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *