
சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணி(திடக்கழிவு மேலாண்மை) ஸ்பெயின், இந்தியா கூட்டு நிறுவனமான URBASER SA and SUMEET FACILITIES LTD PUNE என்ற நிறுவனத்திடம் டெண்டர் டிரான்பரன்சி விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக,ரூ447கோடிக்கு (மண்டலம் 11,12,14,&15க்கு குப்பைகளை அகற்ற ரூ172.50கோடி(Package –II) & மண்டலம் 9,10,&13(Package –V) குப்பைகளை அகற்றரூ274.50 கோடி) ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் 3000 பேட்டரி வாகனங்களை போதிய இட வசதியை இல்லாமல் கொள்முதல் செய்து குவித்துள்ளது.
மந்தைவெளியில் மாநகராட்சியில் லாரி டெப்போவிலிருந்து தினமும் 50க்கு மேற்பட்ட குப்பை லாரிகள், குடி தண்ணீர் லாரிகள், கழிவு நீர் அகற்றும் லாரிகள் 24மணி நேரமும் வந்து போகும்..

50க்கு லாரிகளை சாலைகளில் நிறுத்திவிட்டு, URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்தின் பேட்டரி வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமைப் பொறியாளர் நந்தகுமாரும்(பொது), தலைமைப் பொறியாளர் மகேசனும் அனுமதி கொடுத்துவிட்டார்கள். இப்படி சென்னை மாநகராட்சியின் இடம், டெப்போக்கள் தாரைவார்க்கப்பட்டுள்ளது.
URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் அடையாறு 13 மண்டலத்தில் 21.09.2020 அன்று குப்பைகளை அகற்றும் பணி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்தின் அலுவலகத்தை மட்டும், மயிலாப்பூர் எம்.எல்.ஏவும், முன்னாள் காவல்துறை அதிகாரியும், டி.என்.பி.எஸ்.சியை சீரழித்த நடராசன் ஐ.பி.எஸ்(ஒய்வு) திறந்து வைத்தார்..
சுகாதாரப்பணியாளர்களுக்கு மாதம் ரூ10,000 சம்பளம் கொடுக்க தயார் என்ற அறிவித்த நிறுவனம் தற்போது ரூ6000 – ரூ8000 வரை மட்டுமே சம்பளம் கொடுப்பதாக கூறி 8000 பேரை தேர்வு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் ஒய்வு பெற்ற இலஞ்சம் வாங்குவதில் கைதேர்ந்த, சென்னை மாநகராட்சியை மொட்டை அடித்து, வேலை செய்ய்யாமல் சம்பளம் வாங்கி, மாநகராட்சியை ஏமாற்றி, ஒய்வு பெற்ற மாபியா அதிகாரிகளை குப்பை அள்ளும் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனம், பணிக்கு எடுத்துள்ளது.
ஒய்வு பெற்ற மாபியா அதிகாரிகள் கும்பலை, தலைமைப் பொறியாளர்கள் நந்தகுமாரும், மகேசனும் தான் குப்பை அள்ளும் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனத்துக்கு சிபாரிசு செய்தார்கள்..
ஒய்வு பெற்ற மாநகராட்சியின் மாபியா அதிகாரிகளின் ஆதிக்கத்தில் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனம் சிக்கியுள்ளது.
அக்டோபர் 1ம் தேதி முதல் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனம் குப்பை அள்ளுமா…சாலைகளை கூட்டி சுத்தமாக வைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி இப்போதே எழுந்துவிட்டது.
எதையும் கண்டுகொள்ளாமல் ஊழல் தலைமைப் பொறியாளர்கள் நந்தகுமார், மகேசனுடன் கூட்டணி அமைத்து, சத்தமில்லாமல் சம்பாதிக்கும் ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்.. விரைவில் சென்னை மாநகராட்சி நாறும் நிலைக்கு தள்ளப்படும்..
மக்கள்செய்திமையம் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனம் மீது கொடுத்த புகாரின் பேரில் விரைவில் வழக்கு தொடரப்படும்..