Breaking News
Home / பிற செய்திகள் / நிழல் உதவியாளர் சரவணன் நீக்கம்- சிக்கிய டைரி… சிக்கிய ரூ10கோடி.. நகரமைப்பு அதிகாரிகள் அதிர்ச்சி..

நிழல் உதவியாளர் சரவணன் நீக்கம்- சிக்கிய டைரி… சிக்கிய ரூ10கோடி.. நகரமைப்பு அதிகாரிகள் அதிர்ச்சி..

உள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், 2016 மார்ச் மாதம் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கினார். சரவணன் வீட்டிலிருந்து ரூ77 இலட்சம் கைப்பற்றப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நிழல் உதவியாளர் பதவியில் கொடிக்கட்டி பறந்தார்.  சில நாட்களுக்கு முன்பு ஒரங்கட்டப்பட்ட சரவணன், உள்ளாட்சித்துறை அமைச்சர் பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக கோவையில் விசாரணை வளையத்தில் சிக்கி தவித்து வருகிறார். சரவணன் வீட்டில் 2018, 2019,2020 ஆகிய மூன்று ஆண்டுகளின் டைரி சிக்கியுள்ளது. இதில் 2019ம் ஆண்டில் டைரியின் பக்கம், 68, 124, 178,179,180,  மற்றும் 2020ம் ஆண்டு டைரியில் பக்கம் 16, 38,39, 52 ஆகிய பக்கங்களை பார்த்து, அமைச்சர் தரப்பு அதிர்ச்சியடைந்தது.

 நகரமைப்பு அதிகாரிகள் மட்டும் 2020ம் ஆண்டு, மட்டும் ரூ10கோடி சரவணனுக்கு கொடுத்துள்ளார்கள்.

  ஆவடி, காஞ்சிபுரம், திருவேற்காடு, பூந்தமல்லி, பல்லவபுரம், தாம்பரம், பம்மல், மறைமலைநகர், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளில்  நகரமைப்பு பிரிவில்  தொடர்ந்து 15 ஆண்டுகளாக நகரமைப்பு ஆய்வாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் மீது டன் கணக்கில் புகார்கள் குவிந்துள்ளது. 10க்கு மேற்பட்ட நகரமைப்பு அதிகாரிகள் தலா ரூ100கோடிக்கு சொத்துக்கள் பினாமி பெயரில் வைத்துள்ளார்கள். மேலும் பெரும்பாலான நகரமைப்பு அதிகாரிகள் கன்ஸ்டிரக்சன் நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.

  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் 12 நகரமைப்பு அதிகாரிகள்/ஆய்வாளர்கள் மீது வந்த ஊழல் புகாரை நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்கு அனுப்பி, விரிவான அறிக்கை கேட்டுள்ளது.

 மேலும்  நகரமைப்பு அதிகாரி மாறன், நகரமைப்பு ஆய்வாளர்கள் கணேசமூர்த்தி,குமார், செந்தில்குமார்செழியன், சிவக்குமார், தாமரைச் செல்வன், ராஜேந்திரன், கவிதா, சுப்புதாயி உள்ளிட்ட சிலரது ஊழல் கோப்புகளை அழிக்க,  நிழல் உதவியாளர் சரவணன் மூலம் பேரம் நடந்து  பணம் பரிமாற்றம் நடைபெற்றது. 2020ம் ஆண்டில் மட்டும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் மட்டும் ரூ10கோடி கொடுத்ததற்கான ஆதாரம் டைரியின் பக்கம் 38,39.52ல் குறித்து வைத்துள்ளார்.

 நிழல் உதவியாளர்  சரவணன் ரூ10 கோடியை பெற்றுக்கொண்டு, நகராட்சி  நிர்வாக ஆணையரகத்தில் துணை இயக்குநர் கோபாலகிருஷ்ணன், உதவியாளர் தயாநிதி இருவர் மூலம் நகரமைப்பு அதிகாரிகளின் ஊழல் கோப்புகளை அழிக்க உத்தரவிட்டு இருந்தார்..கோபாலகிருஷ்ணனுக்கும், தயாநிதிக்கும் ஊழல் கோப்புகளை அழிக்க, இலட்சங்களை  கொடுத்துள்ளதாக டைரியில் 52 பக்கம் குறிப்பிட்டுள்ளார்.

 நகரமைப்பு ஊழல் கோப்புகளை கவனிக்கும் இணை இயக்குநர் கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ் பேசிவிட்டதாகவும் டைரியில் குறிப்பிட்டுள்ளார். கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ் என்றைக்கு பேசினேன் என்பதையும் டைரியில் குறிப்பிட்டு உள்ளார்.

 டைரியில் உள்ளபடி நிழல் உதவியாளர் சரவணனிடம் கணக்கு வழக்கு பார்த்தால், பல கோடி அமைச்சர் பெயரில் வசூல் செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது.

  சரவணன்,வாங்கிய பினாமி சொத்துக்கள் தொடர்பாக  விசாரணை நடைபெற்று வருகிறது.. அடிப்படை வசதிகள் கிடைக்கும் என நினைத்து அதிமுகவுக்கு வாக்களித்து அப்பாவி மக்களுக்கு குடிக்க ஒரு வாய் தண்ணியும் கிடைக்கவில்லை, கால் கழுவ உப்பு தண்ணியும் கிடைக்கவில்லை.

 தமிழக அப்பாவி மக்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள் என்பது உண்மை.

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *