
தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. ஏன் திருப்பிக் கொடுக்கப்பட்டது என்பதற்காக விவரங்கள் வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறையின் அரசாணையில்(எண்.340/07.07.2020) தெரிவிக்கப்படவில்லை.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு காவல்துறை அதிகாரிகளின் நிதி தேவையில்லை என்றால், இவர்களை மக்களை கட்டுப்படுத்த மட்டும் அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிதித்துறையின் முதலமைச்சர் நிவாரண நிதியில் 17.09.2020ன்படி ரூ403.20கோடி வந்துள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் 01.07.2020க்கு பிறகு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒருவரும் நன்கொடை கொடுக்கவில்லை.
கொரோனா தொற்று நோயால் பலியானவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 17.09.2020 வரை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து கொரோனா தொற்று நோயால் பலியானவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி இதோ பட்டியல்….

- அருண்காந்தி போக்குவரத்து காவலர் சென்னை – அரசாணை எண். 575/20.04.2020 – ரூ10 இலட்சம்
- ஒசூர் போக்குவரத்து காவலர் சேது – அரசு ஆணை எண். 608/08.05.2020 – ரூ50 இலட்சம்
- கூடுங்குளம் அணு மின்சாரம் உற்பத்தி நிலையத்தில் பாதுகாப்பு காவலராக இருந்த காவலர் சக்திவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஜெகதா இருவருக்கும் தலா ரூ1.50 இலட்சம் என மொத்தம் ரூ3 இலட்சம் -அரசாணை எண்.613/14.05.2020,
- திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரி குமார் – அரசாணை எண்.217/21.05.2020 –ரூ50 இலட்சம்.
- சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நர்ஸ் ஜான் மேரி பிரிசில்லா –அரசாணை எண்.535/05.06.2020 –ரூ5 இலட்சம்
இன்று வரை கொரோனா தொற்று நோயால் பணியில் இருக்கும் போது பலியானவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து கொடுக்கப்பட்ட நிதி ரூ1.18கோடி மட்டும்தான்..
ஆனால் கொரரோனாவுக்காக சிறப்பு வார்டு அமைக்கவும், கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் கொள்முதல் செய்ய ரூ200கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் அரசு பணியில் இருக்கும் போது, பலியானவர்களுக்கு 17.09.2020 வரை ரூ1.18கோடியை தவிர வேறு நிதி வழங்கப்படவில்லை..
முதலமைச்சர் நிவாரண நிதி தொடர்பான சர்ச்சைகளுக்கும்/முறைகேடுகளுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அய்யாவும், துணை முதல்வர் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அய்யாவும் விளக்கம் அளிப்பார்களா…
இந்த முறைகேடுகளில் கூட்டணி தொடருகிறதா?