
உள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், 2016 மார்ச் மாதம் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கினார். சரவணன் வீட்டிலிருந்து ரூ77 இலட்சம் கைப்பற்றப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நிழல் உதவியாளர் பதவியில் கொடிக்கட்டி பறந்தார். சில நாட்களுக்கு முன்பு ஒரங்கட்டப்பட்ட சரவணன், உள்ளாட்சித்துறை அமைச்சர் பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக கோவையில் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சரவணன் தலைமறைவாகிவிட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
சிதம்பரம், கும்பகோணம், காங்கேயம், வெள்ளைக்கோயில், காஞ்சிபுரம், தாம்பரம், திருவண்ணாமலை, திருவேற்காடு உள்ளிட்ட பல நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை நிழல் உதவியாளர் சரவணனின் மாமா நடத்தும் SS engineering நிறுவனமே பணிகளை மேற்க்கொள்கிறது. திடக்கழிவு மேலாண்மை என்ற பெயரில் போலி பில் மட்டுமே கோடிக்கணக்கில் போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துதல் பெயரில் SS engineering கோடிக்கணக்கில் போலி பில் போடப்பட்டுள்ளது.
அதே போல் சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிட் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி நிதித்தணிக்கைத்துறை அறிக்கை கொடுத்தும், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் இன்று தடை செய்யவில்லை.

அதைவிட வேடிக்கை என்னவென்றால், நிழல் உதவியாளர் சரவணன் சிபாரிசில் சென்னை மாநகராட்சியிலும் சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. Chennai Waste mining service pvt ltd என்ற நிறுவனத்தை 2.9.2020 என்று தொடங்கி பல சென்னை மாநகராட்சியில் பல டெண்டர்களை கொடுக்க முயற்சி நடக்கிறது.
சென்னை மாநகராட்சியில் தாமஸ் அய்யாதுரைக்கு சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளில் உள்ள ஒட்டைகளை பயன்படுத்தி, கோடிக்கணக்கில் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பணிகள் செய்யாமல் போலி பில் மட்டுமே போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் நவேந்திரன் அய்யா தான் சமீபத்தில் நிழல் உதவியாளர் சரவணனுக்கு நெருக்கமாக இருந்து, பண பரிமாற்றங்களுக்கு உறு துணையாக இருந்தார். நவேந்திரன் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்..
உள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனுக்கு என்னாச்சு என்பது புதிராக உள்ளது.
சரவணனின் பினாமி நிறுவனங்கள் மீது, ஆதாரங்களுடன் மக்கள்செய்திமையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுத்துள்ளது.