Breaking News
Home / பிற செய்திகள் / தமிழக அரசின்… அண்ட புளுகு…ஆகாச புளுகு… நிதித்துறையா… வருவாய் துறையா…

தமிழக அரசின்… அண்ட புளுகு…ஆகாச புளுகு… நிதித்துறையா… வருவாய் துறையா…

கொரோனா தொற்று தொடபான நிதி ஒதுக்கீட்டில் நிதித்துறை, வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இடையே ஒரு மித்த கருத்து இல்லை. இந்த மூன்று துறைகளில் கொரோனா தொடர்பாக வெளியாகும் அரசு ஆணைகளில் ஒரே குழப்பம்…

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் குறிப்புக்கோப்பில் ரேசன் கார்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மாஸ்க் கொள்முதலுக்கு(13.48கோடி மாஸ்க்) முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது  Administrative financial sanction may be accorded for procurement of 13.48 crs cloth masks f or supply to the family members of 2.08 cr ration card holders in the state. It is also informed that the above expenditure may be met from the Chief ministers”s Public relief fund என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

 ஆனால் நிதித்துறையில் முகக்கவசம் கொள்முதல் செய்வதற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்படவில்லை. இதனால் உத்தரவின் நகல் வழங்கும் நிலை ஏழவில்லை என்று நிதித்துறையின் பொதுத் தகவல் அலுவலர் பா.வேலாயுதம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி கேட்ட தகவலுக்கு தகவல் அளித்துள்ளார்…

  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அரசாணையின் நோட் பைலை எடுத்துக்கொள்வதா… நிதித்துறையின் தகவலை எடுத்துக்கொள்வதா என்ற குழப்பம் தான் ஏற்பட்டுள்ளது…

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அதுல்யாமிஸ்ரா ஐ.ஏ.எஸ்க்கும், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்க்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுப்பாட்டால், இரண்டு துறைகளிலும் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது..

  அதே போல் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக Letter No.68299/Finance(CMPRF)/91-1 dated 29.7.91ன்படி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக முதலமைச்சர் நிவராண நிதியிலிருந்து நிதிஒதுக்கீடு செய்த அனைத்தும் சட்ட விரோதமாகும்…

 இது தொடர்பாக விரிவாக 1991 அரசாணையுடன் நாளை பார்க்கலாம்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *