Breaking News
Home / பிற செய்திகள் / அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனிடம்- பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பட்டியல்…

அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனிடம்- பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பட்டியல்…

உள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், 2016 மார்ச் மாதம் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கினார். சரவணன் வீட்டிலிருந்து ரூ77 இலட்சம் கைப்பற்றப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நிழல் உதவியாளர் பதவியில் கொடிக்கட்டி பறந்தார்.  சில நாட்களுக்கு முன்பு ஒரங்கட்டப்பட்ட சரவணன், உள்ளாட்சித்துறை அமைச்சர் பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக கோவையில் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

 அமைச்சர் சரவணனின் மூன்று செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மாறுதல், பதவி உயர்வு, ஊழல் கோப்புகளை அழிக்க பணம் கொடுத்தவர்கள் பட்டியல் இதோ…

  1. பல்லவபுரம் நகராட்சியில் ஆணையராக இருந்த போது, சரவண செல்வரத்தினம் வணிக வளாகம் என்.ஒ.சி கொடுத்த முறைகேட்டில் சிக்கிய எம்.செந்தில்முருகன், திண்டுக்கல் மாநகராட்சியில் ஆணையராக உள்ளார். செந்தில்முருகன், திருச்சி மாநகராட்சி ஆணையர் பதவிக்கு மாறுதல் கேட்டு சரவணனிடம் பல லட்சம் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்.
  2. ஆவடி மாநகராட்சி ஆணையராக இருந்த, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் ரவிச்சந்திரன், திண்டுக்கல் மாநகராட்சி அல்லது சேலம் மாநகராட்சியில் ஆணையராக மாறுதல் கேட்டு, கோடிக்கணக்கில் பேசி, இலட்சக்கணக்கில் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்.
  3.  திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், ஏற்கனவே சரவணனை ஏமாற்றிவிட்டதால், சென்னை மாநகராட்சியில் வட சென்னை பகுதியில் உதவி ஆணையராக மாறுதல் செய்துவிட்டு, அங்கு செந்தில்முருகனை மாறுதல் செய்ய சரவணன் முடிவு செய்திருந்தார்.
  4. சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ்யை, திண்டுக்கல் மாநகராட்சிக்கு மாறுதல் செய்யவும் சரவணன் முடிவு செய்திருந்தார். சதிஷ் தன்னை மாற்றாமல் இருக்க முயற்சி செய்துக்கொண்டு இருந்தார்..

   சேலம் மாநகராட்சி இணையதளத்தில் கவுன்சில் தீர்மானத்தை கிளிக் செய்தால், சேலம் மாநகராட்சி தீர்மானம் வராது. 2020ம் ஆண்டு தீர்மானங்கள் பதிவு செய்யவில்லை. 2019ல் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மூன்று மாதம் தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி  தீர்மானத்தை கிளிக் செய்தால் திருவண்ணாமலை நகராட்சி தீர்மானம் வரும்.  அந்தளவுக்கு புத்திசாலித்தனமாக சேலம் மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

 இதையெல்லாம் கூட கவனிக்க, சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் அய்யாவுக்கு நேரம் இல்லை.

 திருவேற்காடு நகராட்சி பொறியாளர் ஆனந்த ஜோதி மட்டுமே, கொரோனாவில் கோடிக்கணக்கில் போட்ட போலி பில், பணத்தில் சரவணனை பண மழையில் நனையவைத்து, காஞ்சிபுரம் நகராட்சி உதவி பொறியாளராக பதவி உயர்வில் சென்றுவிட்டார்..

  இப்படி சரவணனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், என்ன செய்வது என்று  தெரியாமல் புலம்புக்கொண்டு இருக்கிறார்கள்..

  சரவணனிடம் தாம்பரம், மறைமலைநகர், பல்லவபுரம், பம்மல், திருவேற்காடு, ஆவடி, செம்பாக்கம், காஞ்சிபுரம், திருவள்ளூர், பூந்தமல்லி நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவில் மாறுதலுக்கும், ஊழல் கோப்புகளை அழிக்கவும் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியலில்  வெளியாகும்..                                                           தொடரும்…

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *