Breaking News
Home / பிற செய்திகள் / அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் எங்கே? கோவையில் விசாரணை வளையத்திலா.. பார்த்தீபனை தொடர்ந்து சரவணன்- பணம் கொடுத்தவர்கள் புலம்பல்..

அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் எங்கே? கோவையில் விசாரணை வளையத்திலா.. பார்த்தீபனை தொடர்ந்து சரவணன்- பணம் கொடுத்தவர்கள் புலம்பல்..

உள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், வருமான வரித்துறை ரெய்டில் சிக்கினார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக நிழல் உதவியாளர் பதவியில் கொடிக்கட்டி பறந்தார்.  சில நாட்களுக்கு முன்பு ஒரங்கட்டப்பட்ட சரவணன், உள்ளாட்சித்துறை அமைச்சர் பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக கோவையில் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

 சரவணனிடம் மாறுதல், பதவி உயர்வு, ஊழல் கோப்புகளை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் குப்பைத் தொட்டியில் போடுதல் இதற்கெல்லாம் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்கள், பணம் திரும்ப கிடைக்குமா என்று புலம்புகிறார்கள்.

 நகரமைப்பு அதிகாரிகள், தங்கள் ஊழல் கோப்புகளை அழிக்க, சரவணனிடம் இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுத்துள்ளார்கள்.

 சரவணனின் 7868057737 மற்றும் 9489206050 ஆகிய இரு செல்போன் எண்களும் ஆப் செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

 சரவணன் பினாமி நிறுவனங்கள் மூலம் பல நகராட்சிகள், பேரூராட்சிகளின் நிர்வாகங்களை ஆட்டிப்படைத்தார்.

 மறைமலைநகர், திருவேற்காடு, பல்லவபுரம், ஆவடி உள்ளிட்ட பல நகராட்சிகளில் SRINIVASA WASTE MANAGEMENT SOLUTION PVT LTD நிறுவனம் குப்பைகள் அகற்றும் டெண்டரில் பல முறைகேடுகளில் ஈடுப்பட்டது. அதனால் கோடிக்கணக்கில் நகராட்சிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. SRINIVASA WASTE MANAGEMENT SOLUTION PVT LTD நிறுவனத்தை பிளாக் பட்டியலில் வைத்து, தடை செய்ய வேண்டும் என்று உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை அறிக்கையில் கூறியுள்ளது.

 ஆனால் சரவணன் பின்னணியில் இருந்த காரணத்தால் உள்ளாட்சி நிதித் தணிக்கைத்துறை அறிக்கையை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு, SRINIVASA WASTE MANAGEMENT SOLUTION PVT LTD நிறுவனத்துக்கு சட்டத்துக்கு புறம்பாக பணிகளை நகராட்சி ஆணையர்கள் கொடுத்தார்கள்.

 அதே போல் காஞ்சிபுரம் நகராட்சி, சிதம்பரம் நகராட்சி, கோயம்புத்தூர் மண்டலம், சிட்லப்பாக்கம் பேரூராட்சி உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளில்  SS engineering நிறுவனத்தின் பெயரில் தெரு விளக்கு பராமரிப்பு, குப்பைகளை அகற்றுதல், சுகாதார பணியாளர் சப்ளை என்ற பெயரில் 12 தனக்கு நெருக்கமானவர்களை வைத்துக்கொண்டு  சரவணன் தனி ராஜ்ஜியமே நடத்தினார்.

  டூபாக்கூர் ஒப்பந்ததாரர் அபெக்ஸ் என்ஜினியரிங். அபெக்ஸ் கன்ஸ்டிரக்சன்  நிறுவனத்தின்  அபெக்ஸ் முருகன், சரவணன் காலில் இலட்சக்கணக்கில் கொட்டி, திருவேற்காடு நகராட்சியில் கோடிக்கணக்கில் டெண்டர்களை பெற்று உள்ளார்.

 தாம்பரம் நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிழல் ஆணையரே சரவணன் தான்.  இப்படி பல நகராட்சிகளில் பினாமி நிறுவனங்கள் மூலம் நிர்வாகத்தை நடத்தி வந்த  உள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், அமைச்சர் பெயரில் பல கோடி வசூல் செய்து, ஏமாற்றிவிட்டதாக கோவையில் அமைச்சரின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார்.

 சரவணன் எங்கே..செல்போன் ஆப் செய்யப்பட்டுவிட்டது(7868057737 மற்றும் 9489206050 ) கொடுத்த பணம் கிடைக்குமா என்று பல நகராட்சி அதிகாரிகள் புலம்பி வருகிறார்கள்..

SRINIVASA WASTE MANAGEMENT SOLUTION PVT LTD நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்று மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், நகராட்சி நிர்வாக ஆணையரகம், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஆகியோருக்கு புகார் கொடுத்துள்ளது. விரைவில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *