Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… அதிமுக அரசின் முகக் கவசம் ஊழல் ரூ100கோடி… மீண்டும் ரூ60கோடிக்கு முகக் கவசம்..

கொரோனா… அதிமுக அரசின் முகக் கவசம் ஊழல் ரூ100கோடி… மீண்டும் ரூ60கோடிக்கு முகக் கவசம்..

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த முகக் கவசம் கட்டாய அணிய வேண்டும் என்ற தினமும், வித விதமான அரசாணை வெளியிடப்பட்டது. ஒவ்வொரு அரசு ஆணையிலும்  3 லேயர் முகக் கவசம், என்.95 முகக் கவசம் விலை வேறுபாடாக இருந்தது.

 அதிமுக அரசின் முகக் கவசம் கொள்முதலில் மட்டும் ரூ100கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. ரூ100கோடி முகக் கவசம் ஊழலுக்கான ஆதாரங்களை மக்கள்செய்திமையம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் மூலம் ஆவணங்களை சேகரித்து உள்ளது.

  முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து  ரூ28கோடியை நிதி சட்டத்துக்கு புறம்பாக எடுத்து, 2.08 கோடி ரேசன் கார்டுகளில் உள்ள 6.74கோடி பேருக்கு தலா 2முகக் கவசம் என்று13.48கோடி முகக் கவசம் திருப்பூரில் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.

 ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல், முகக் கவசம் 5.8.2020 முதல் கொடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். முதல்வர் அறிவித்து 40 நாட்கள் கடந்த பிறகு முகக் கவசம் ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்படவில்லை.

  மீண்டும் ரூ60கோடிக்கு single layer three fold 2 ply cotton  முகக் கவசம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

 ஏற்கனவே  ரூ28கோடிக்கு 13.48 கோடி கொள்முதல் செய்த முகக் கவசத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. மீண்டும் ரூ60கோடிக்கு முகக் கவசம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் கொள்முதல் செய்கிறார்கள்..

 ரூ60கோடி முகக் கவசம் என்றால் குறைந்தது 27கோடி முகக் கவசம் கொள்முதல் செய்யப்படும். ஏன்…எதற்காக ஒண்ணுமே புரியவில்லை.

 அதே போல் 10 வகுப்பு தேர்வு என்ற பெயரில் பள்ளி கல்வி தேர்வு இயக்குநரகத்தில், சமூக நலத்துறையிலிருந்து 38 இலட்சம் முகக் கவசம் கொள்முதல் செய்யப்பட்டது. தேர்வு நடக்கவில்லை. முகக் கவசம் என்னாச்சு என்று தெரியவில்லை.

 தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் 15.4.2020 அன்று முகக் கவசம் 63.21இலட்சம் ஸ்டாக் இருந்தது.  என்.95 முகக் கவசம் 3.07 இலட்சம் ஸ்டாக் இருந்தது. இந்த முகக் கவசம் எந்த துறைக்கு விநியோகம் செய்யப்பட்டது என்ற விவரமே தெரியவில்லை..

 இப்படி முகக் கவசம் கோடிக்கணக்கில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் ரேசன்கார்டுகளுக்கு முகக் கவசம் விலை இல்லாமல் அளிக்கப்படவில்லை. பிறகு கொள்முதல் செய்யப்பட்ட முகக் கவசங்களின் எங்கே…

 முகக் கவசம் என்ற பெயரில் ஊழலுக்கு நேந்துவிட்டாச்சு…வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை ஆணையராக இருக்கும் அய்யா பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருக்கிறார்..

 முகக் கவசம் கொள்முதல் தொடர்பாக பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் அய்யா வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா?

   மக்கள்செய்திமையம் முகக் கவசம் கொள்முதலில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குரகத்தில் புகார் கொடுத்துள்ளது. விரைவில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *